Tuesday, June 16, 2020

On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
 திருச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு முழுவதும், நோயாளிகளுக்கு, 'ஆக்சிஜன்' செலுத்தும் வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  
 திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு உள்ளது. 

 இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோரை தங்க வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. சில வாரங்களாக, திருச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், எதிர்கால தேவை கருதி, இந்த அரசு மருத்துவமனையில், ஆறு மாடிகள் உடைய, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை கட்டடத்தில் உள்ள வார்டுகள் அனைத்தும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன

 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தும் வகையில், இங்குள்ள, 350 படுக்கைகளுக்கும், பிரத்யேக குழாய் அமைத்து, 'ரெகுலேட்டர்'கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே, 'கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருவோருக்கும், புதிதாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், இந்த வார்டில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது' என, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்

0 comments: