Wednesday, June 17, 2020

On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி புத்தூர் சின்ன மைதான மார்க்கெட்டில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக 60 வியாபாரிகள் இங்கு காய்கறி, மீன், கருவாடு, கோழி மற்றும் ஆடு இறைச்சி  கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இங்குள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இங்குள்ள மார்க்கெட்டை நம்பி தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. அதனால் எங்களுக்கு மாற்று ஏற்பாடு ஏதேனும் செய்து கொடுக்கவேண்டும். செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி இன்று காய்கறி, மீன் மற்றும் கோழிக்கறி வியாபாரிகள் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 comments: