Wednesday, June 17, 2020

On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. 

  திருச்சி-கரூர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். 

 அப்போது வாரணாசி தேர்தலில் போட்டியிட வேண்டாம். 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். நதிகள் இணைக்கப்படும். விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்கப்படும். 5 லட்சம் ரூபாய் கடன் வட்டி இல்லாமல்  கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். 

 ஆனால் ஓராண்டாகியும் இன்னும் அவற்றை நிறைவேற்றப்படவில்லை. அதனால் நதிகளை இணைக்க வேண்டும். அதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். லாபகரமான விலை கொடுக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டி விரைவில் டெல்லி சென்று நிர்வாண போராட்டம் நடத்தப்படும். கொரோனா பாதிப்புக்கு 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார். ஆனால் விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

 குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  தற்போது உள்ள தண்ணீர் 40 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடைமடை பகுதிகளுக்கு இரண்டு நாட்களில் சென்றுவிடும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் 10 நாட்கள் ஆனாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையாது என்றார். 

0 comments: