Sunday, June 14, 2020

On Sunday, June 14, 2020 by Tamilnewstv in    
*சொத்து தகராறில் தென்னை மரங்களை வெட்டி கடத்திய விஹெச்பி மாநில பொருளாளருக்கு போலீஸ் வலை* 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் என்.ஆர்.என். பாண்டியன் (76) விசுவஹிந்து பரிசத்தின்  மாநில பொருளாளராக உள்ளார்.  இவருக்கும் இவரது உறவினரான தியாகராஜன் (61) என்பவருக்குமிடையே சொத்துதகறாறு இருந்துவந்த நிலையில் தியாகராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநிலையில் பாண்டியன் கடந்த 9 ம்தேதி சம்பந்தப்பட்ட விவசாய தோட்டத்தில் தோப்பில் இருந்த 80 தென்னை மரங்களை 20 பணி ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தியாகராஜன் துவரங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்தனர். முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இன்று பிற்பகல் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாண்டியனை கைது செய்யசென்றபோது அவர் தலைமறைவானார். இதனையடுத்து அவரது காரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துவந்த போலீசார் பாண்டியனை தேடி வருகின்றனர்.

0 comments: