Monday, June 15, 2020

On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது .


திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட 20 ஊராட்சிகளை சேர்ந்த 200 தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிவாரண உதவியை அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் வழங்கினார். துணைத்தலைவர் வனிதா சத்தியசீலன், அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகளாக அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, உணவு ஆகியவை வழங்கப்பட்டது.

0 comments: