Monday, June 15, 2020

On Monday, June 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 15

 திருச்சி ஜி கார்னரில் செயல்பட்டு  வரும் காய்கறி வியாபாரிகள்  தங்கள் கடைகளை மீண்டும் காந்தி மார்கெட்டிற்கு  மாற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர் 


 இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 7ஆம் தேதி திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் காந்தி மார்க்கெட்  அனைத்து காய்கறி சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜுலு இக்கூட்டத்தில் அவருடன் 50க்கு மேற்பட்டோர்கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். 

 இதனை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து அமைச்சர்களை சந்தித்து முறையிட கடந்த வாரம் அவர் சென்னை சென்று வந்தார் இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது 


 இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி தேவர் ஹாலில் வியாபாரிகளும் கொரோனா பரிசோதனை அரசு மருத்துவர்  சாந்தி தலைமையில் நடைபெற்றது.

   நூற்றுக்கும் மேற்பட்ட  பி.ஆர்.சி எனப்படும் கொரோனா தொற்று  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முன்னதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி பரிசோதனை நடைபெறுவதை  பார்வையிட்டார்.

0 comments: