Thursday, June 11, 2020

On Thursday, June 11, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் கொரோனா தொற்று ..! பாதுகாப்பை பலப்படுத்தாத அதிகாரிகள்..!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  இந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 1875 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. திருச்சியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. திருச்சியில் நேற்று வரை 132 பேர் கொரோனாவிற்கு பாதித்து இருந்தனர். இதில் 105 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். ஒரே ஒரு மூதாட்டி மட்டும் கொரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.


 இதை அடுத்து 26 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

சமயபுரம் பகுதியில் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதாக 2 பேர் தனிமை படுத்துவதற்காக திருச்சி  அரசு தலைமை மருத்துவ மனைக்கு  ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர், தற்பொழுது அவர்கள் இருந்த இடம் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் எந்த வித பாதுகாப்பும் ஏற்படுத்தாமல் மேலும் அப்பகுதியில் கொரோனா  பரவும் அச்சம் நிலவி வருகிறது, 

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் விசுவநாதன் அவர்களிடம் செய்தியாளர்கள்  பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்ட பொழுது சரியாக பதில் அளிக்கவில்லை பிறகு நாங்க பாக்காத பிரஸ் அஹ என கூறி மழுப்பி சென்றுவிட்டார்.

0 comments: