Friday, January 02, 2015

On Friday, January 02, 2015 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 2–வது மண்டல அலுவலகத்தில் நடந்தது. மேயர் விசாலாட்சி தலைமை தாங்கினார். துணைமேயர் குணசேகரன், மண்டல தலைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிஆணையர் வாசுகுமார் வரவேற்றார். கூட்டத்தில் 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, தெருவிளக்குகளை முறையாக பராமரிப்பது இல்லை என்றும், சாக்கடை கால்வாயை தூர்வாருவதில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேயர் விசாலாட்சி பேசிய போது கூறியதாவது:– 
அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். வார்டுக்கு ஒரு பணியாளர் நியமித்து கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரிவசூலிப்பாளர்கள் முறையாக வரி வசூல் செய்ய வேண்டும். கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
பொது நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்த வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கி சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.

0 comments: