Friday, January 02, 2015

On Friday, January 02, 2015 by farook press in ,    
திருப்பூர் 1–வது மண்டல பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–பிரதமரின் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தில் 1–வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு வங்கியில் கணக்கு தொடங்கினோம். இந்த கணக்குகளையெல்லாம் ஆரம்பித்து 4 மாதங்கள் ஆகியும் வங்கி கணக்குகளின் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. வங்கி கணக்கு எண்ணைக்கூட வங்கி மேலாளர்கள் தர மறுக்கிறார்கள். ரூ.1,000 செலுத்தினால் தான் வங்கி புத்தகம் தரப்படும் என்று வங்கி மேலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வங்கி கணக்கு தொடங்கிய பொதுமக்களுக்கு வங்கி புத்தகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

0 comments: