Tuesday, February 03, 2015

On Tuesday, February 03, 2015 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட காவல்துறையும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இணைந்து நடத்தும் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு 5 நாள் கிரிக்கெட் போட்டி நாளை பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் துவங்குகிறது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை-பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் காவல்துறை பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள்- 2015  நாளை 03.02.2015 முதல் 07.02.2015 வரை தொடந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் பல்லடம் புரொபஷனல் கல்லூரி மற்றும் உடுமலை அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி மைதனங்களில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அவினாசி மஹாராஜா பொறியியல் கல்லூரி, பல்லடம் பார்க் கல்லூரி, புரொபஷனல் கல்லூரி, ஸ்கேட் கல்லூரி, ஏஞ்சல் கல்லூரி, ஜெய் ஸ்ரீ ராம் கல்லூரி, ஏ. ஜி கலை கல்லூரி, உடுமலை அரசு கலை & அறிவியல் கல்லூரி, வித்யசாகர் கல்லூரி, தாராபுரம் மஹாராணி பாலிடெக்னிக் கல்லூரி, பிஷப் த்ரோப் கலை & அறிவியல் கல்லூரி, காங்கயம்  ஈ.பி.ஈ.டி குழும பயிலகம், ஊத்துக்குளி ராமநாதன் பொறியல் கல்லூரி, சசூரி பொறியல் கல்லூரி மற்றும் வெள்ளகோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 15 கல்லூரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பான அணியும்  கலந்து கொள்கின்றன.
முதல் போட்டி பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் நாளை 3ம் தேதியன்று துவங்கிறது.இந்நிகழ்ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் ஆயுஷ்மணி திவாரி,திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் கழகத்தின் தலைவர் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் துவக்கி வைக்கிறார். மேற்கண்டவாறு மாவட்ட காவல்துறை அனுப்ப்பியுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளனர்.

0 comments: