Tuesday, March 15, 2016

On Tuesday, March 15, 2016 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்தார்.
------------------------------------------
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தூய வளனார் தன்னாட்சி கல்லூரியில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கிவைத்து மாணவ மாணவியர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2016 அன்று 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். தேர்தல் நாளன்று வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றவேண்டும். மாணவ மாணவியர்கள் உறவினர்கள்ää நண்பர்கள் வீட்டின் அருகில் வசிப்போர் ஆகியோரிடம் வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்து கூற வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்; நேர்மையாகவும் நியாயமாகவும்அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். மனச்சாட்சிப்படி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்  வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட முறையான வாக்காளர் கல்வி மற்றும் வாக்காளர் பங்கேற்பு (ளுஎநநி) பற்றி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில்ää திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தெருமுனைப் பிரச்சாரம் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டுதல்ää துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் வீடியோ வாகனம் மூலம் திரைப்படக் கலைஞர்கள் நடித்துள்ள விழிப்புணர்வு குறும்படம் திரையிடுதல் பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது பற்றிய செயல்முறை விளக்கம்ää பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மக்கள் அதிகமாகக் கூடும் சந்திப்புகளில் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராஜ் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்குமார் தூய வளனார் கல்லூரி முதல்வர் .ஆன்ட்ரோ கல்லூரி செயலர் செபாஸ்டின் அரியமங்கலம் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் .பத்மாவதி மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

0 comments: