Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்டார். இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சிங்கராஜ் திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். இவருக்கு சக நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள், வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பதவி ஏற்ற நீதிபதி சிங்கராஜ் 1998 –ல் சேலம் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதியாக பணியை தொடங்கினார். பின்னர் திருச்சி மற்றும் பெரியகுளத்தில் ஜே.எம்.1 நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 2008–ல் அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணிபுரிந்தார். 2010–ல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 2011–ல் பெரியகுளத்தில் சப்–ஜட்ஜ் ஆக பணிபுரிந்தார். இதைதொடர்ந்து பதவிஉயர்வு பெற்று நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி தற்போது திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.

0 comments: