Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப்பெருமானின் அறுபடை வீடு கோவில்களுக்கு சென்று மொட்டையடிப்பதற்காக தமிழக சட்டசபை துணை சபாநாயகரும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆலோசனைப்படி உடுமலை நகராட்சி துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம் தலைமையில் 54 பேர் கடந்த 7–ந்தேதி உடுமலையில் இருந்து புறப்பட்டனர்.
அவர்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோவில்களுக்கு சென்றனர். ஒவ்வொரு கோவிலிலும் 9 பேர் வீதம் மொத்தம் 54 பேர் மொட்டை போட்டனர். பின்னர் அவர்கள் உடுமலைக்கு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலளார் கே.ஜி.சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் அறுபடை வீடு கோவில்களுக்கு சென்று மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தியவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.மணிவாசகம், யு.கே.பி.ராதாகிருஷ்ணன், நகர கழக மாவட்ட பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குனர் பி.சிதம்பரநாதன், நகர பேரவை செயலாளர் வி.என்.வெங்கடேஷ், நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வி.ஆர்.வேலுச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.ஆறுமுகம், ஜி.தனலட்சுமி, மாவட்ட பேரவை துணை தலைவர் எஸ்.ரகுபதி, பனியன்துரை, கே.குமரேசன், ஜெ.மணிவண்ணன், உ.மா.குப்புசாமி, கே.ஆர்.பி.பாஸ்கர், சென்னை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: