Friday, July 18, 2014

On Friday, July 18, 2014 by Anonymous in , ,    
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி செல்லும் மாணவ– மாணவிகள் சாக்கடையில் மிதித்து செல்ல வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. இதனால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தூக்கிச் சென்று சாக்கடையை தாண்டி இறக்கிவிட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இது பற்றி பொது மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 500–க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென்று அம்பத்கர் கல்லூரி சாலையின் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படடது.
தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழைய வண்ணாரப் பேட்டை ஜி.ஏ. ரோட்டில் உள்ள நடைபாதை வியாபாரிகள் இன்று காலை கல்லரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் சிலர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டினர். வியாபாரிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க.வினரும் மறியலில் கலந்து கொண்டனர்.
ராயபுரம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

0 comments: