Friday, July 18, 2014

On Friday, July 18, 2014 by TAMIL NEWS TV in , , ,    
அதிமுக கோஷ்டி மோதல்: விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு 57–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபு. இவரது தம்பி பாலாஜி.இவர் ஈரோடு மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவராக உள்ளார். இவர்கள் ஆர்.கே.வி. ரோட்டில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடை முன்பு பூக்கடையும் வைத்து அவர்கள் நடத்தி வந்தனர்.
இதற்கு ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியுமான பி.பி.கே.பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.இதை தொடர்ந்து நேற்று இரவு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் கவுன்சிலர் பிரபுவின் தம்பி முரளிதரன் படுகாயம் அடைந்தார். மற்றும் பி.பி.கே பழனிச்சாமி தரப்பில் அவரது மகன் பி.பி.கே.மணிகண்டன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த மோதலில் பிரபு வுக்கு சொந்தமான ஒட்டலின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த சம்பவத்தினால் கடைவீதி பகுதியில் நேற்று சிறிது பரபரப்பும் ஏற்பட்டது.

0 comments: