Thursday, April 23, 2020
இது அனைத்தும் மாவட்ட மேலாளர் வெளியிடவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை ?
பணியாளர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு தவறு செய்யும் நபர்களை பாதுகாத்து வருகிறார் அதன் படி அரசியல் தலைவர்களும் உடந்தையாக இருக்கிறார்களா? பார் எடுக்கும் அரசியல்வாதிகள் தான் பணியாளர்களை மிரட்டுகிறார்களாம்
திருச்சி மாவட்டத்தில் அதிகமாக சரக்கு வெளியில் வர காரணம் மாவட்ட மேலாளர் வண்டி வாடகை தராததால் பணியாளர்களே வண்டிக்கு வாடகை தருவதற்கு சரக்குகளை பணியாளர்களே
வெளியே மதுபானங்களைவிற்கிறார்களாம் காவலுக்கு வரும் காவல்துறையினரும் சரக்குகளை வாங்கிக் கொள்கிறார்களாம். இப்படிப்பட்ட அவல நிலையில் பணியாளர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தத்திற்குறிய விஷயமாக உள்ளது. சரக்குகளைப் பாதுகாப்பதற்கு பணியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இப்படி சரக்குகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனவில் இறந்தாலும் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டாலும் மன அழுத்தத்தால் இயற்கையாக இறந்தாலும் பணியாளர்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் உள்ளது இப்படி நிலை நீடித்தால் வருங்காலத்தில் என்ன தான் தீர்வு?
ஆனால் அவர்களை எச்சரித்து மட்டும் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது உள்ளே பேரம் பேசப் பட்டதா என்று தெரியவில்லை? சில பத்திரிக்கை ஊடகவியாளர்கள் அந்த எட்டு பேர் சரக்கு அடிப்பதை போட்டோ வீடியோ எடுத்து வைத்து பேரம் பேசப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த சூப்பர்வைசர் மன உளைச்சலில் மாரடைப்பினால் இறந்துள்ளார் உண்மை என்ன நடந்தது என்ற விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்
மணப்பாறை தாலுகா உள்ள ஒரு கடையில் இருப்பு சரி பார்த்ததில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பதும் மேலும் திருச்சி துவாக்குடி ஒரு பகுதியில் உள்ள கடையில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது?
Thursday, May 18, 2017
புதுடெல்லி
2017 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதற்கு முந்தைய நாள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றியபோது, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
கர்ப்பிணிகளுக்கு உதவி
அப்போது அவர், “நாட்டில் உள்ள 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி கர்ப்பிணி பெண்களின் ஆஸ்பத்திரி செலவு, தடுப்பூசி, ஊட்டச்சத்துணவு ஆகியவற்றுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இந்த நிதி உதவி திட்டமானது, பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் உயிர் இழக்கும் அவலத்தை பெரிதும் குறைத்துவிடும்” என குறிப்பிட்டார்.
சோதனை ரீதியில் 53 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. அந்த மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
நாடு முழுவதும் அமல்
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய எரிசக்தித்துறை மந்திரி பியுஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
இந்த திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும். இதில் ரூ.5 ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் தரப்படும்.
ரொக்கமாக வழங்கப்படுகிற இந்த தொகை, கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு செல்லாததால் ஏற்பட்ட கூலி இழப்பை சரிக்கட்டுவதாகவும் அமையும். எனவே பிரசவத்துக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியும். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படவும் மாட்டார்கள்.
இது பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி நாட்டு மக்களுக்கு அறிவித்த திட்டம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வங்கி கணக்கில் செலுத்தப்படும்
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* இந்த மகப்பேறு உதவி திட்டம் 2017-ம் ஆண்டு, கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அந்த நாள் முதல், 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த திட்ட செலவினம் ரூ.12 ஆயிரத்து 661 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7 ஆயிரத்து 932 கோடி.
* முதல் குழந்தைக்கு மட்டும்தான் செயல்படுத்தப்படும்.
* இந்த திட்டத்தின் பலனை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் தவிர்த்து அனைத்து பெண்களும் பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள்.
* கர்ப்பத்தை பதிவு செய்தவுடன் ரூ.1,000, 6 மாதங்களுக்கு பிறகு முதல் கர்ப்ப கால பரிசோதனை செய்த பின்னர் ரூ.2 ஆயிரம், குழந்தை பிறந்த பின்னர் தடுப்பூசிகள் போடுகிற காலகட்டத்தில் ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரத்தை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கர்ப்பிணிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி விடும். விதிமுறைகளின்படி பயனாளிகள் மீதித்தொகையையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் சராசரியாக ஒவ்வொரு கர்ப்பிணியும் ரூ.6 ஆயிரம் பெறுவர்.
10 அணு உலைகள்
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-
* நாட்டின் அணுமின் உற்பத்தியை பெருக்கும் விதத்தில் புதிதாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 10 கனநீர் உயர் அழுத்த அணு உலைகள் அமைக்கப்படும். இந்த அணு உலைகள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகம், அரியானா மாநிலங்களில் அமையும். இதன்மூலம் 7 ஆயிரம் மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
* சர்வதேச பயங்கரவாதத்தையும், நாடு கடந்த திட்டமிட்ட குற்றங்களையும் தடுப்பதில் ஒத்துழைப்பது என இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
* கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பன்முக மாநாட்டு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடலாம்.
சட்ட திருத்தம்
* பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு கட்டுமானங்கள் செய்வதற்கு ஏற்ற வகையில் சட்ட திருத்தம் செய்து கொள்ளலாம்.
* அசாம் மாநிலத்தில் ரூ.155 கோடி செலவில் இந்திய விவசாய ஆராய்ச்சி கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.
* மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக அனல்மின் நிலையங்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படும். இதற்காக ‘சக்தி’ என்னும் புதிய நிலக்கரி இணைப்பு கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
உடுமலை நகரில் வ.உ.சி.வீதி கல்பனா ரோடு சந்திப்பில் உள்ளது மனமகிழ் மன்றம் 94.73 சென்ட் பரப்பளவை கொண்ட இந்த இடம் உடுமலை நகராட்சியின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பிரமுகர்களை உறுப்பினர்களாக கொண்ட மனமகிழ்மன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த மனமகிழ்மன்றத்தின் வளாகத்தில் 3 தங்கும் அறைகள், உணவு அறை, பிரதான ஹால் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமும் உள்ளது. கடைகளும் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மனமகிழ் மன்ற வளாகத்தில் கட்டுப்பட்டுள்ள அறை கட்டிடங்கள், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மனமகிழ் மன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. நகராட்சிக்கும் மனமகிழ் மன்றத்துக்குமான பிரச்சினை சில காலமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சி அதிகாரிகள், மனமகிழ்மன்றத்திற்கு சென்று அங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததாக கூறப்படும் 3 தங்கும் அறைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர். இதன் தொடர் நடவடிக்கையாக மீண்டும் அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் பிரதான ஹாலுக்கு ‘சீல்‘ வைத்தனர். அத்துடன் கடைகள் கட்டப்பட்டுள்ள பகுதியில் மேல்தளத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த 3 அறைகளுக்கும் ‘சீல்‘ வைத்த னர். உடுமலை நகராட்சிக்கும் மனமகிழ் மன்றத்திற்குமான பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
பிரதான நுழைவு வாயில்
இந்த மனமகிழ்மன்ற வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் எப்போதும் போல் பூப்பந்து விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மனமகிழ்மன்ற பிரதான நுழைவு வாயிலின் கதவை (மெயின்கேட்) பூட்டி சீல் வைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் நேற்று பிற்பகல் மனமகிழ்மன்றத்திற்கு வந்துள்ளனர். அதற்கு அங்கிருந்த மனமகிழ்மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இந்த பிரச்சினை குறித்து கோர்ட்டை அணுகி உள்ளதாகவும், கோர்ட்டு உத்தரவு கைக்கு கிடைக்க ஓரிரு நாட்கள் ஆகும் எனவும் அதுவரை எந்த தொடர் நடவடிக்கையும் வேண்டாம் எனவும் கூறி மெயின் கேட்டை பூட்டி சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயம் மெயின்கேட்டை பூட்ட முடியாதபடி 2 கார்கள் மெயின் கேட்டின் நடுவில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். நகராட்சியின் 2 லாரிகள் அங்கு வந்தன. அந்த 2 லாரிகளும் மனமகிழ்மன்றத்தின் மெயின் கேட்டிற்கு முன்புறம் கார்கள் நிறுத்தி இருந்த இடத்திற்கு அருகே சாலையில் நிறுத்தப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் மனமகிழ்மன்றத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
முடிவில் இப்போது இருக்கும் நிலையே தொடரும் வகையிலான கோர்ட்டு உத்தரவு ஓரிரு நாட்களில் கைக்கு கிடைத்துவிடும் என்று மனமகிழ்மன்றத்தினர் தெரிவித்தனர். அதுவரை மெயின் கேட்டை பூட்டி சாவியை போலீஸ் அதிகாரிகள் வைத்திருப்பது என்றும் கூறப்பட்டது.
பூட்டப்பட்டது
இதைத்தொடர்ந்து மனமகிழ்மன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியில் வந்தனர். மெயின் கேட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களும், லாரிகளும் அகற்றப்பட்டது.
மனமகிழ்மன்றத்தின் மெயின் கேட் மற்றும் பக்கவாட்டு கதவு ஆகியவை பூட்டப்பட்டது. அந்த 2 சாவிகளும் மனமகிழ் மன்றத்தாரால் போலீஸ் அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டது
Wednesday, April 26, 2017
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி செயலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலைவகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் விளக்க உரையாற்றினார். காங்கேயம், ஊத்துக்குளி,திருப்பூர் அவினாசி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்
Monday, April 24, 2017
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் ஒய்.அன்பு உள்பட மாவட்ட நிர்வாகிகள் கோவையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரை நேரில் சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 167 கடை மூடப்பட்டுள்ளன. இதில் வேலை செய்த ஊழியர்கள் தற்போது வேலையின்றி உள்ளனர். இந்நிலையில் பிற பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருக்கும் நிலையில் வெளியாட்களை கொண்டு வியாபாரம் செய்யப்படுகிறது. ஒருபுறம் டாஸ்மாக் ஊழியர்கள் வேலையிழந்திருக்கும்போது மறுபுறம் வெளியாட்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் வியாபாரம் நடைபெறும் கடைகளில் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, மேற்படி கடைகளில் இருக்கக்கூடிய வெளியாட்களை வெளியேற்றிவிட்டு, வேலையிழந்து நிற்கக்கூடிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும். மூடப்பட்ட கடைகளில் பல லட்சம் மதிப்புள்ள மதுபான சரக்குகளும், தளவாடங்களும் உள்ளன. இவற்றுக்கு இதுவரை சம்பந்தப்பட்ட கடைகளில் வேலை செய்து வந்த ஊழியர்களே பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் டாஸ்மாக் நிர்வாகமே அந்த கடைகளுக்குரிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் புதிய கடைக்கு இடம் பார்க்க ஊழியர்களை நிர்பந்தம் செய்வதையும் கைவிட வேண்டும் என்று சிஐடியு சார்பில் முதுநிலை மண்டல மேலாளரிடம் கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு செய்வதாக மண்டல முதுநிலை மேலாளர் கூறினார்
அவிநாசி; அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு 190 மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5300 முதல் ரூ.5925 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2100 முதல் ரூ.3300 வரையிலும் ஏலம் போனது. எல்.ஆர்.ஏ. ரகப்பருத்தி மற்றும் டி.சி.எச். ரகப்பருத்தி வரத்து இல்லை. மொத்தம் ரூ.3 லட்சத்து ஐந்தாயிரத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.ஏலத்தில், அவிநாசி, அன்னூர், திருப்பூர், பல்லடம், சேவூர், குன்னத்தூர், பென்னாகரம், கிணத்துக்கடவு, கோபி, நம்பியூர், புளியம்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து 90 விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 8 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் கலந்து கொண்டனர்
திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பெரும் தொகையை மதுபானத்திற்கே செலவு செய்வதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் நிர்வாகம் பொது மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 15 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபான பிரியர்கள் லீவு எடுக்காமல் தினமும் பின்னலாடை நிறுவனத்திற்கு வருகிறார்கள். ஒரு சில கூலித்தொழிலாளர்கள் மதுக்கடைகள் துாரமாக இருப்பதால் குடியை நிறுத்தியுள்ளனர். பின்னலாடை நிறுவனங்களில் கடினமாக உழைக்கும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் தற்போது குடிப்பதை நிறுத்தியுள்ளனர். பல குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பின்னலாடை நிறுவனங்களுக்கு அனைத்து தொழிலாளர்களும் லீவு எடுக்காமல் வருவதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. பின்னலாடை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாநகரில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வசதி, தரமான தார் ரோடு, குப்பைகளை அகற்றியும், சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆங்காங்கே சாக்கடை கழிவுகள் தேங்கி கிடப்பதால் தொழிலாளர்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டீமா தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்
திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள கல்லாங்காடு சுப்பரமணியம் நகரை சேர்ந்தவர் சுதாகர் (37). அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (35). இவர்களின் மகள் மது (8), அனு (5).இவர்களில் மதுஅதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சுதாகர் தனது மனைவி மற்றும் இரு மகள்களையும் பைக்கில் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றார். வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சுதாகர், வனிதா, அனு ஆகிய 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மது லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் வள்ளிசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
திருப்பூர்: தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவர் தமிழ்செல்வன், தங்கவேல், உணவு பாதுகாப்பு அலுவர்கள் முருகேஷன், தங்கவேல் மற்றும் ஊழியர்கள் நேற்று திருப்பூர் அதியமான் வீதியில் உள்ள பகுதியில் மாம்பழம் வைத்திருக்கும் குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வெள்ளிங்கிரி (35) என்பவர் குடோனில் ரசாயணக்கல் வைத்து சுமார் 3 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சாலமன் என்பவருக்கு செந்தமான குடேனில் 2 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு குடோன்களிளும் உள்ள சுமார் 5 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதனை மாநகராட்சி குப்பை கிடங்கில் வைத்து அழிக்க ஊழியர்களுக்கு உத்தவிட்டனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தெரிவிக்கையில்: ரசாயணக்கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிடும்போது, உடலில் உணவு குழாய், குடல் புண், வயிற்றுப்போக்கு, சிலநேரங்களில் புற்றுநோய் வருவதற்க்கும் வாய்ப்புள்ளது. இது போன்ற பழங்களை குழந்தைகள் சாப்பிடும் போது தொண்டை பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழக்கும் வாய்ப்புள்ளது. 5 டன் மாம்பழங்களையும் திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்படும். மேலும், சம்பத்தப்பட்ட கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28ம்தேதி துவங்கியது. கம்பம் நடுதல், கொடியேற்றம், பூவோடு ஏந்துதல், திருக்கல்யாண நிகழ்ச்சி என திருவிழா களைகட்டியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6.30 மணிக்கு மாரியம்மன் சூலதேவருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மதியம் பரிவேட்டை நடந்தது. தைத்தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து துவக்கிவைத்தார். பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், மகேந்திரன் எம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் சாதனை குறள், டிஎஸ்பி விவேகானந்தன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாந்தி, இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, நகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் தயானந்தன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் வடம் பிடித்தனர். தேரோட்டத்தை காண காலை முதலே சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் உடுமலையில் குவிய துவங்கினர். பக்தர்களுக்கு தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் நீர்மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் மாரியம்மன் கோயிலில் புறப்பட்டு பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, வடக்கு குட்டை வீதி, பெரியகடை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் பொள்ளாச்சி ரோட்டை அடைந்து மாலை 6.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, பாலக்காடு கேசவன் என்ற யானை தேரை தள்ளியது. இன்று (24ம் தேதி) காலை குங்கும அபிசேகம், மாலையில் சாந்தி பூஜை, இரவு 8 மணிக்கு அம்மன் பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு குட்டை திடலில் வாணவேடிக்கையும் நடக்கிறது. நாளை மகா அபிஷேகம், முத்துப்பல்லக்கு ஊர்வலத்துடன் திருவிழா நிறைவடைகிறது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
திருச்சி மார்ச் 24 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ...
-
திருச்சி 20.12.16 திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சியில் உள்ள 111 வங்கி கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்...