Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    




காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
பனியன் தொழில் நகரான திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்றுகாலை திருப்பூரில் உள்ள பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பனியன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டன.
ரூ.85 கோடி
உற்பத்தி பாதிப்பு
பின்னலாடை தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், நிட்டிங் நிறுவனங்களும் நேற்று செயல்படவில்லை. பின்னலாடை தொழில் சார்ந்த 90 சதவீத நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் அந்த பகுதிகள் தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் ஆர்டர்களின் அவசரம் கருதி செயல்பட்டன. சில நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள இரண்டாம் தர பின்னலாடை விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பனியன் விற்பனை பாதிக்கப்பட்டது. நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி ரூ.85 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்

0 comments: