Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in , ,    






விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 38). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக இருந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3½ வயதில் நித்தீஷ் என்ற குழந்தை உள்ளது.

வழக்கம்போல் நேற்று முன்தினம் சிங்காரம் ஓட்டலுக்கு சென்றார். இரவு வேலை முடிந்ததும் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சத்யாவிற்கும், சிங்காரத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கழுத்தில் காயங்கள்

இந்த நிலையில் நேற்று காலையில் சிங்காரம் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில், விவசாய பூச்சி மருந்தின்(விஷம்) வாசம் வீசியது. உடனே சத்யா, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சிங்காரத்தின் உடலை பார்த்து சென்றனர். மேலும் இது தொடர்பாக கெடார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப்செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிங்காரத்தின் உடலை பார்வையிட்டனர். அப்போது சிங்காரத்தின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

எனவே சிங்காரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, சிங்காரம் இறந்தது தொடர்பாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மனைவி கைது

அப்போது சத்யாவின் நடவடிக்கையை போலீசார் உன்னிப்பாக கவனித்தனர். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் சத்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சத்யா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிங்காரத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாரிடம் சத்யா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்காதல்

எனக்கும், சிங்காரத்துக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. நான் எங்களது கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்றேன். அப்போது எனக்கும், அதே செங்கல் சூளையில் கூலிவேலை செய்த புதுப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். எனது கணவர் வேலைக்கு சென்றவுடன், ரவியை வீட்டிற்கு வரவழைப்பேன். வீட்டில் இருவரும் சந்தோஷமாக இருப்போம். ரவியின் மூலம் நான் கர்ப்பமானேன். தற்போது எனக்கு 3½ வயதில் நித்தீஷ் என்ற மகன் உள்ளான்.

குடிபோதையில் திட்டினார்

ரவி எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால், கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. இவர்கள் மூலமாக எனது கணவர் சிங்காரத்துக்கும் தெரிந்து விட்டது. இதனால் எனது கணவர் என்னை கண்டித்தார். இனிமேல் செங்கல் சூளைக்கு செல்லக்கூடாது, ரவியுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. 

வீட்டிலேயே இருந்தேன். கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தவித்தேன்.
இந்த நிலையில் 24-ந் தேதி(நேற்று முன்தினம்) இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிங்காரம், ரவியுடன் கள்ளக்காதல் வைத்திருப்பது தொடர்பாக என்னை ஆபாசமாக பேசினார். உடனடியாக நான், ரவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, எனது கணவர் அடிக்கடி என்னை திட்டுகிறார். எனவே நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றேன்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றேன்

அதற்கு ரவி, நீ ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். நாம் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும். நமக்கு இடையூறாக உள்ள சிங்காரம் தான் சாக வேண்டும். எனவே நாம் இருவரும் சேர்ந்து சிங்காரத்தை கொலை செய்து விடலாம் என்றார். இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். உடனே ரவி, உன் கணவர் தூங்கியவுடன் எனக்கு செல்போன் மூலமாக தகவல் கொடு. உடனடியாக வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

எனது கணவர் சிங்காரம் இரவு 10.30 மணிக்கு தூங்கினார். உடனே நான், ரவிக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தேன். உடனடியாக ரவி எனது வீட்டிற்கு வந்தார். இதையடுத்து மாடு கட்டுவதற்காக வைத்திருந்த கயிற்றால் சிங்காரத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

உடலில் விஷத்தை தெளித்தோம்

பின்னர் சிங்காரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அனைவரையும் நம்ப வைக்க இருவரும் முடிவு செய்தோம். அதற்காக ஏற்கனவே ரவி, விவசாய பயிர்களுக்கு தெளிப்பதற்கான மருந்தை(விஷம்) வாங்கி வந்திருந்தார். அதனை சிங்காரத்தின் உடல் முழுவதும் தெளித்தோம். பின்னர் ரவி, அங்கிருந்து சென்று விட்டார்.

மறுநாள் காலையில் எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடினேன். இதனை எங்கள் கிராம மக்கள் நம்பி விட்டார்கள். ஆனால் போலீசார் நம்பவில்லை. போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்

0 comments: