Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    




கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறினார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:–
கொலை
கோடநாடு எஸ்டேட்டுக்கு வாகனங்களில் சென்ற கும்பல் 10–வது நுழைவு வாயிலில் பணியில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ஓம் பகதூரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் பங்களாவின் கதவை உடைக்க முடியாததால் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதற்குள் சத்தம் கேட்டு ஊழியர்கள் அங்கு திரண்டதால், கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு 15 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் ஆவணங்களை திருடிச்சென்றுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் எஸ்டேட்டுக்குள் இருந்து எந்த பொருளும் திருட்டு போகவில்லை. இந்த சம்பவங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்

0 comments: