Showing posts with label ooty. Show all posts
Showing posts with label ooty. Show all posts

Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    




கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறினார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:–
கொலை
கோடநாடு எஸ்டேட்டுக்கு வாகனங்களில் சென்ற கும்பல் 10–வது நுழைவு வாயிலில் பணியில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ஓம் பகதூரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் பங்களாவின் கதவை உடைக்க முடியாததால் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதற்குள் சத்தம் கேட்டு ஊழியர்கள் அங்கு திரண்டதால், கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு 15 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் ஆவணங்களை திருடிச்சென்றுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் எஸ்டேட்டுக்குள் இருந்து எந்த பொருளும் திருட்டு போகவில்லை. இந்த சம்பவங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்

Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in ,    




ஊட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் அண்மையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டபோது இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது


இச்சம்பவம் நிகழ்ந்த சில நாட்களிலேயே ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அந்த ஆவணங்களை அபகரிக்க முயன்றபோது இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றத்தை கல்லூரி தலைவர் கடோக் திறந்து வைத்தார்.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல் லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரி களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றம் மற்றும் உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ராணுவ கல்லூரி தலைவர் கடோக் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் கடோக் உணவக அறைகள், மனமகிழ் மன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், ராணுவம் தொடர்பான ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் மத்தியில் கடோக் பேசியதாவது:-
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்கு நமது நாட்டின் நட்புறவு நாடுகளின் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இளம் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்குவதற்காக மனமகிழ் மன்றம் தொடங்கப் பட்டது.
நமது நாட்டை சேர்ந்த முப் படை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்கு அர்ப்பணம் செய் யும் வகையில் தங்களது கடமையை உணர்ந்து பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனம் மகி ழும் வகை யில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முப்படை அதி காரிகள் கலந்து கொண் டனர். 
On Friday, September 05, 2014 by farook press in ,    
நீலகிரியில் தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஊட்டி ரோஜா பூங்கா வில் 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் புதி தாக நடவு செய்யப் பட்டு உள்ளன.
ரோஜா பூங்கா
இந்தியாவில் உள்ள பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்றாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ் கிறது. இங்கு சுமார் 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள் ளது. இந்த செடிகளில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீலம், ஊதா, உள்ளிட்ட பல் வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் மலர்கின்றன.
இதன் காரணமாக இந்த ரோஜா பூங்காவை காண நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கமே மாதம் ரோஜா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அணைகள், தடுப்பணைகள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் ரோஜா பூங்காவில் புதிய செடிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறிய தாவது:-
தற்போது மழை பெய்து வருவதால் பட்டுபோன செடி களுக்கு பதிலாக புதிய செடிகள் நடவு செய்ய திட்ட மிட்டு உள்ளோம். இதற்காக கர்நாடகா மாநிலம் பெங்க ளூரில் உள்ள தனியார் நிறு வனத்திடம் இருந்து 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் வாங்கப் பட்டு உள்ளது. இந்த செடிகள் நடவு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரு கிறது.
இந்த புதிய ரோஜா செடி களில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் மலர தொடங்கும். எனவே கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.