Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
நீலகிரியில் தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஊட்டி ரோஜா பூங்கா வில் 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் புதி தாக நடவு செய்யப் பட்டு உள்ளன.
ரோஜா பூங்கா
இந்தியாவில் உள்ள பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்றாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ் கிறது. இங்கு சுமார் 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ரோஜா செடிகள் உள் ளது. இந்த செடிகளில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீலம், ஊதா, உள்ளிட்ட பல் வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் மலர்கின்றன.
இதன் காரணமாக இந்த ரோஜா பூங்காவை காண நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கமே மாதம் ரோஜா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அணைகள், தடுப்பணைகள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் ரோஜா பூங்காவில் புதிய செடிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறிய தாவது:-
தற்போது மழை பெய்து வருவதால் பட்டுபோன செடி களுக்கு பதிலாக புதிய செடிகள் நடவு செய்ய திட்ட மிட்டு உள்ளோம். இதற்காக கர்நாடகா மாநிலம் பெங்க ளூரில் உள்ள தனியார் நிறு வனத்திடம் இருந்து 180 ரகங்களை சேர்ந்த ஆயிரத்து 800 ரோஜா செடிகள் வாங்கப் பட்டு உள்ளது. இந்த செடிகள் நடவு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரு கிறது.
இந்த புதிய ரோஜா செடி களில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் மலர தொடங்கும். எனவே கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: