Thursday, May 11, 2017

On Thursday, May 11, 2017 by Tamilnewstv in    
திருச்சி தனியர் பொறியில் கல்லூரியில்   ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பாக மாணவர்களுக்கான அறிவுத்திறமைக்கு மெருகூட்டும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

திருச்சி புதுக்கேட்டை சாலையில் அமைந்துள்ள M.I.E.T பொறியில் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் அறிவு கூர்மையை வெளிப்படுத்தும் விதத்தில் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி இடம்பெறும்.இதில்      இயந்திர பொறியியல் மாணவர்களின் புத்தம் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் வாகனங்களின் உமிழ்வு  புகையைக் குறைக்கும் வகையில் Green Vehicle, கால்நடைகளுக்கான தீவனப் புல் வெட்டும் கருவி, கையிழந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கும் Safety vehicle, தென்னை மரம் ஏறும் கருவி, விதை விதைக்கும் இயந்திரம் போன்ற 6 படைப்புக்களை புதிதாக படைத்தனர் .

இதில் கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டாக்கி கொடுக்கும் கருவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விவசாயம் அழிந்து வரும் வேலையில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் அதிக நேரம் செலவிடாமல் உணவளிக்க இந்த இயந்திரம் செயல்படும். இதில் கலந்துகொண்ட மாணவர்களை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும்  நிர்வாகத்தினர்  வெகுவாக பாராட்டினர்.

பேட்டி:   பாலசுந்தர் (மாணவர்)

0 comments: