Thursday, April 23, 2020

On Thursday, April 23, 2020 by Tamilnewstv in ,    
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது?

24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்தால் முழுமையாக வங்கியில்பணம் கட்டியிருக்க வேண்டும்
ஊரடங்கு உத்தரவில் கள்ளதனமாக மதுபானங்கள் விற்றதில் ஒரு கடைக்கு 1000 ஆயிரம் பல லட்சம் விற்றபனையில் வித்தியாசம் ஏன்?

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளது 24.3.2020 .ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு காரணமாக கடைகள் 6 மணிக்கு மூடப்பட்டதால் டாஸ்மாக் மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது விற்பனையான பணம் அதற்கு அடுத்த நாள் வங்கிகள் 25 தேதி தெலுங்கு வருட பிறப்பு வங்கிகள் விடுமுறை. அதற்கு மறுநாள் 26 ஆம் தேதி வங்கியில் பணம் கட்டினார்கள். ஆனால் மதுபானங்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாக பாதுகாப்பான இடத்திற்கு டாஸ்மாக் மதுபானங்களை திருச்சியில் உள்ள திருச்சி துவாக்குடி மதுபான குடோன்.. கலையரங்கம் தியேட்டர்.,தேவர்ஹால். முசிறி டி என் சி குடோன் . மணப்பாறையில் உள்ள கல்யாண மண்டபம். திருச்சி உள்ள சுமார் 174 கடைகளை சரக்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளது .அரசே மதுபானங்களை எடுத்து வருவதற்காக  ஒப்பந்த ஊர்தி எடுத்து வருவதற்கு அரசாங்கம் வாடகை தரவில்லையாம் தமிழகம் முழுவதும் பணியாளர்களே வாடகை கொடுத்து இருக்கிறார்கள் வாடகை என்பது வண்டி வாடகை மற்றும் சரக்குகளை ஏற்றுவதற்கு ஒரு கூலி இறக்குவதற்கு ஒரு கூலி அனைத்தையும் பணியாளர்களை கொடுத்திருக்கிறார்கள் அரசாங்கம் இதுவரை வண்டி வாடகை தரவில்லை. திருச்சி மாவட்டத்தில் வாடகை என்பது முதன்முதலாக சரக்கு எடுத்த கடைகளுக்கு 25 ரூபாய் என்றும் அதன் பிறகு எடுத்த கடைகளுக்கு 20 ரூபாய் என்றும்  கடைகளில் டாஸ்மார்க் ஒப்பந்த வண்டி காரர்களே முடிவு செய்து  டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணத்தை பெற்றுக்கொண்டனர்   இந்த தவறை திருச்சி மாவட்ட மேலாளரிடம் எடுத்து சொல்லியும் எந்த பலனும் இல்லை டாஸ்மார்க் ஒப்பந்த வண்டி காரர்களிடம் இடமிருந்து கமிஷன் பெறுகிறார் திருச்சி மாவட்ட மேலாளர். வாடகை ஒப்பந்த வண்டியின் சூப்பர்வைசர் இஸ்மாயில்  என்பவர் இவர் ஆளும் கட்சிக்கு உடன் தொடர்பு உடையவர் இவரை திருச்சி மாவட்ட மேலாளர்  பகைத்துக்கொள்ள மாட்டாராம் இவருக்கு அலுவலகத்தில் உள்ள டெம்போ மேனேஜர் ஜெயப்பிரகாஷ் (தாசில்தார்) மற்றும் அலுவலக பணியாளர் தியாகராஜன் சரக்கு பில் அடிப்பவர் டாஸ்மார்க் கடை  சூப்பர்வைசர் ஜெயபிரகாஷ, இவர்கள் இஸ்மாயிலுக்கு  உடந்தை ஆதலால் பணியாளர்களை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறாராம் இந்த இஸ்மாயில் பணியாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை மேலும் எந்த கடைக்கு எவ்வளவு சரக்கு வேண்டும் என்பது நிர்ணயம் செய்வது டாஸ்மார்க் கடை சூப்பர்வைசர் ஜெயப்பிரகாஷ் இஸ்மாயிலும் மற்றும் சூப்பர்வைசர் ஜெயபிரகாஷ் மனைவியும் சேர்ந்து மதுபான பெட்டியின் கணக்கு எண்ணிக்கையை வீட்டில் பில் அடிப்பார்களாம் அப்படிப் பில் அடிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லையாம். இதை யாரும் கேட்க முடியாது ஊழல் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது? சரக்குகளை மாற்று இடத்துக்கு கொண்டு வரும்பொழுது தணிக்கை(auditing) செய்கிறார்கள் தணிக்கையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் சுமார் 1000 ஆயிரத்திலிருந்து பல லட்சம் வரை  வித்தியாசம் வருகிறது துறையூருக்கு அருகில் உள்ள ஆதனூர் கடையில் சரக்குகளே இல்லை அனைத்தும் பிளாக்கில் விற்கப்பட்டுள்ளன.

   இது அனைத்தும் மாவட்ட மேலாளர் வெளியிடவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை ?

பணியாளர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு தவறு செய்யும் நபர்களை பாதுகாத்து வருகிறார் அதன் படி  அரசியல் தலைவர்களும் உடந்தையாக இருக்கிறார்களா? பார் எடுக்கும் அரசியல்வாதிகள் தான் பணியாளர்களை மிரட்டுகிறார்களாம்

திருச்சி மாவட்டத்தில் அதிகமாக சரக்கு வெளியில் வர காரணம் மாவட்ட மேலாளர் வண்டி வாடகை தராததால் பணியாளர்களே வண்டிக்கு வாடகை தருவதற்கு சரக்குகளை பணியாளர்களே
 வெளியே மதுபானங்களைவிற்கிறார்களாம்  காவலுக்கு வரும் காவல்துறையினரும் சரக்குகளை வாங்கிக் கொள்கிறார்களாம். இப்படிப்பட்ட அவல நிலையில் பணியாளர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தத்திற்குறிய விஷயமாக உள்ளது. சரக்குகளைப் பாதுகாப்பதற்கு பணியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இப்படி சரக்குகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனவில் இறந்தாலும் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டாலும் மன அழுத்தத்தால் இயற்கையாக இறந்தாலும் பணியாளர்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் உள்ளது இப்படி நிலை நீடித்தால் வருங்காலத்தில் என்ன தான் தீர்வு?


சமீபத்தில் திருச்சி கலையரங்கத்தில்  மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் இருந்து மதுபானங்களை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது . இந்த மதுபானங்களை சூப்பர்வைசர்கள் சிலர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை எடுத்து வந்து மது அருந்தி உள்ளனர் இந்த விஷயம் மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

 இவர்கள் எந்த இடத்தில் 8 பேரும்  மது அருந்தி உள்ளனர் என்றும் அருந்திய பிராண்டும் மேலாலருக்கு  தெரியுமாம்.

ஆனால் அவர்களை எச்சரித்து மட்டும் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது உள்ளே பேரம் பேசப் பட்டதா என்று தெரியவில்லை? சில பத்திரிக்கை ஊடகவியாளர்கள் அந்த எட்டு பேர் சரக்கு அடிப்பதை  போட்டோ வீடியோ எடுத்து வைத்து பேரம் பேசப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த சூப்பர்வைசர் மன உளைச்சலில் மாரடைப்பினால் இறந்துள்ளார்  உண்மை என்ன நடந்தது என்ற விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்

இப்படி ஊழல் செய்தவர்களை அழைத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் தான்  உண்மை வெளிவரும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மணப்பாறை தாலுகா உள்ள ஒரு கடையில் இருப்பு சரி பார்த்ததில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பதும் மேலும் திருச்சி துவாக்குடி ஒரு பகுதியில் உள்ள கடையில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது?


0 comments: