Thursday, April 23, 2020

On Thursday, April 23, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் இலவச உணவு -  துவக்கி வைத்து அமைச்சர் 1.50 லட்சம் நிதி வழங்கினார்.

 தமிழகம் முழுவதும் கொரனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி அரசு அறிவித்துள்ளது.

இந்நாட்களில் ஏழை எளிய மக்கள் உணவுக்கு அவதிப்படும் நிலையை கருத்தில் கொண்டு அம்மா  உணவகத்தில் இலவச உணவு வழங்கும்  திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி கிழக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட 7அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு, மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அதற்காக ரூபாய் 1.50லட்சத்துக்கான காசோலையை .
மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணிடத்தில்
வழங்கினார்.
கடந்த 2 நாட்கள் க்கு முன்பு 300 மூட்டை அரிசி அம்மா உணவகத்திற்காக வழங்கியது அடுத்து இன்று இதர மிளக பொருட்கள் மற்றும் காய்கறி வாங்குவதற்கான இத்தொகையை  வழங்கினார்.
பின்னர்  செய்தியாளரிடம் பேசிய அவர் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வரையில் தினந்தோறும் அனைத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க அறிவுறுத்தி உள்ளேன். இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


0 comments: