Friday, April 24, 2020

On Friday, April 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - 


திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை புதைக்க சென்னையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன்அதன்படி, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த திருச்சி சரகத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 19 காவல் உட்கோட்டங்களில் அந்தந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்களை 'குழு நிர்வாகியாக' நியமித்து மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த துணைப் பணியாளர்கள் அடங்கிய ஒரு ’வாட்ஸ் அப்’ குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளரும் ஒரு உறுப்பினராவர்.தூய்மைப் பணியாளர்களுக்கென 66 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் அந்தந்த ஆய்வாளர்களைக் 'குழு நிர்வாகியாக' நியமித்து வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது.மேற்கண்டவர்களுக்கு ஏதாவது பிரச்னைகள் இருந்தால் இந்தக் குழுவில் உள்ள காவல் அலுவலர்கள் மூலம் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த துணை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் வசிக்கும் இடங்களை டிஜிட்டல் வரைபடம் மூலம் ஒன்றிணைத்து அவர்களை இ.பீட் (E.Beat) முறையின் மூலம் காவலர்களை கொண்டு பாதுகாப்பு அளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

0 comments: