Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    








அவிநாசி; அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு 190 மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5300 முதல் ரூ.5925 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2100 முதல் ரூ.3300 வரையிலும் ஏலம் போனது. எல்.ஆர்.ஏ. ரகப்பருத்தி மற்றும் டி.சி.எச். ரகப்பருத்தி வரத்து இல்லை. மொத்தம் ரூ.3 லட்சத்து ஐந்தாயிரத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.ஏலத்தில், அவிநாசி, அன்னூர், திருப்பூர், பல்லடம், சேவூர், குன்னத்தூர், பென்னாகரம்,  கிணத்துக்கடவு, கோபி, நம்பியூர்,  புளியம்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து 90 விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 8 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் கலந்து கொண்டனர்

0 comments: