Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    







திருப்பூர்: திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்  ஊழியர் சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் ஒய்.அன்பு உள்பட மாவட்ட  நிர்வாகிகள் கோவையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரை நேரில் சந்தித்து  இது குறித்து முறையிட்டனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில்  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 167 கடை மூடப்பட்டுள்ளன. இதில் வேலை செய்த  ஊழியர்கள் தற்போது வேலையின்றி உள்ளனர். இந்நிலையில் பிற பகுதிகளில்  செயல்படும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருக்கும் நிலையில்  வெளியாட்களை கொண்டு வியாபாரம் செய்யப்படுகிறது. ஒருபுறம் டாஸ்மாக்  ஊழியர்கள் வேலையிழந்திருக்கும்போது மறுபுறம் வெளியாட்களை பயன்படுத்தி பல  லட்சம் ரூபாய் வியாபாரம் நடைபெறும் கடைகளில் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, மேற்படி கடைகளில் இருக்கக்கூடிய வெளியாட்களை வெளியேற்றிவிட்டு,  வேலையிழந்து நிற்கக்கூடிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.  மூடப்பட்ட கடைகளில் பல லட்சம் மதிப்புள்ள மதுபான சரக்குகளும், தளவாடங்களும்  உள்ளன. இவற்றுக்கு இதுவரை சம்பந்தப்பட்ட கடைகளில் வேலை செய்து வந்த  ஊழியர்களே பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் டாஸ்மாக் நிர்வாகமே அந்த  கடைகளுக்குரிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் புதிய கடைக்கு  இடம் பார்க்க ஊழியர்களை நிர்பந்தம் செய்வதையும் கைவிட வேண்டும் என்று  சிஐடியு சார்பில் முதுநிலை மண்டல மேலாளரிடம் கேட்டுக் கொண்டனர். இந்த  கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு செய்வதாக மண்டல முதுநிலை மேலாளர்  கூறினார்

0 comments: