Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    







திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
தமிழகத்தில் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பெரும் தொகையை மதுபானத்திற்கே செலவு செய்வதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் அனைத்து  மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் நிர்வாகம் பொது மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 15 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபான பிரியர்கள் லீவு எடுக்காமல் தினமும் பின்னலாடை நிறுவனத்திற்கு வருகிறார்கள். ஒரு சில கூலித்தொழிலாளர்கள் மதுக்கடைகள் துாரமாக இருப்பதால் குடியை நிறுத்தியுள்ளனர். பின்னலாடை நிறுவனங்களில் கடினமாக உழைக்கும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் தற்போது குடிப்பதை நிறுத்தியுள்ளனர். பல குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பின்னலாடை நிறுவனங்களுக்கு அனைத்து தொழிலாளர்களும் லீவு எடுக்காமல் வருவதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. பின்னலாடை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாநகரில்  மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வசதி, தரமான தார் ரோடு, குப்பைகளை அகற்றியும், சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆங்காங்கே சாக்கடை கழிவுகள் தேங்கி கிடப்பதால் தொழிலாளர்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.  தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டீமா தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்

0 comments: