Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள கல்லாங்காடு சுப்பரமணியம் நகரை சேர்ந்தவர் சுதாகர் (37). அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (35). இவர்களின் மகள் மது (8), அனு (5).இவர்களில் மதுஅதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சுதாகர் தனது மனைவி மற்றும் இரு மகள்களையும் பைக்கில் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றார். வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சுதாகர், வனிதா, அனு ஆகிய 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மது லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் வள்ளிசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
0 comments:
Post a Comment