Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    






திருப்பூர்: தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவர் தமிழ்செல்வன்,  தங்கவேல், உணவு பாதுகாப்பு அலுவர்கள் முருகேஷன், தங்கவேல் மற்றும் ஊழியர்கள் நேற்று திருப்பூர் அதியமான் வீதியில் உள்ள பகுதியில் மாம்பழம் வைத்திருக்கும் குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வெள்ளிங்கிரி (35) என்பவர் குடோனில் ரசாயணக்கல் வைத்து சுமார் 3 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சாலமன் என்பவருக்கு செந்தமான குடேனில் 2 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து, இரண்டு குடோன்களிளும் உள்ள சுமார் 5 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதனை மாநகராட்சி குப்பை கிடங்கில் வைத்து அழிக்க ஊழியர்களுக்கு உத்தவிட்டனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தெரிவிக்கையில்: ரசாயணக்கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிடும்போது, உடலில் உணவு குழாய், குடல் புண், வயிற்றுப்போக்கு, சிலநேரங்களில் புற்றுநோய் வருவதற்க்கும் வாய்ப்புள்ளது. இது போன்ற பழங்களை குழந்தைகள் சாப்பிடும் போது தொண்டை பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழக்கும் வாய்ப்புள்ளது. 5 டன் மாம்பழங்களையும் திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்படும். மேலும், சம்பத்தப்பட்ட கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

0 comments: