Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in    





திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. குடிநீர் குழாய் ஆய்வாளர்கள் பலர் இருந்தும், குழாய் உடைப்பு பிரச்னை தொடர் கதையாகவே இருக்கிறது. பி.என்.ரோடு, போயம்பாளையம், பிச்சம்பாளையம் புதூர், மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம், பங்களா ஸ்டாப், புஷ்பா தியேட்டர், குமார் நகர், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிச்சிபாளையம் வாட்டர் டேங்க், வினோபா நகர், வெள்ளியங்காடு 60 அடி ரோடு, நடராஜா தியேட்டர் ரோடு, சபாபதிபுரம், மங்கலம் ரோடு கோழிப்பண்ணை, குளத்துப்புதூர் போன்ற இடங்களில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கால், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்காக, காலி குடங்களுடன் அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் மக்கள் ரோட்டுக்கே வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே பிரதான குடிநீர் குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகியது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது

0 comments: