Showing posts with label Erode. Show all posts
Showing posts with label Erode. Show all posts

Monday, October 27, 2014

On Monday, October 27, 2014 by Unknown in    
வடகிழக்கு பருவமழை தீவிரம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதேபோன்று மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து கடந்த ஒரு மாதமாக தடப்பள்ளி–அரக்கன் கோட்டை மற்றும் கீழ்பவானி பாசனத்துக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் 75 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 14–ந்தேதி 70 அடியாக சுருங்கியது.
தற்போது பெய்யும் பருவ மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 78.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 14–ந்தேதிக்கு பின்னர் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் இருந்து 78.34 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் பவானி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கீழ்பவானி பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் 84 மி.மீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக பெருந்துறையில் 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
On Monday, October 27, 2014 by Unknown in    
கந்தசஷ்டி விழா தொடக்கம்: முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தமிழ் கடவுளாம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாக்கள் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புகழ்மிக்க சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், ஈரோடு திண்டல்மலை வேலாயுத சாமி கோவில், கோபி பச்சை மலை பாலமுருகன் கோவில், பவளமலை முத்து குமாரசாமி கோவில் மற்றும் ஈரோடு காசி பாளையம் மலேசிய பாலமுருகன் கோவில் ஆகிய கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் அபிசேகமும், சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சியுடன் நடந்து வருகிறது.
கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பக்கத்து மாவட்டமான திருப்பூர், கோவை மாவட்டத்திலிருந்தும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வழிபட வந்த வண்ணம் உள்ளனர்.
திண்டல்மலை முருகன் கோவிலிலும் காலையிலிருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் கோபி பச்சைமலை, பவளமலை முருகன் கோவில்களுக்கும் கந்தசஷ்டி விழா தொடங்கிய நாளிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள்.
மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. அனைத்து கோவில்களிலும் வரும் 29–ந் தேதி சூரசம்ஹார விழாவும், 30–ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.
இன்னும் ஒரிரு நாட்களில் முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பலர் காவடிகள் எடுத்து வருவார்கள், அலகுகள் குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி பறக்கும் காவடியும் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். 

Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by Unknown in ,    


Tha Pandian, தா பா‌ண்டிய‌ன், இ‌ந்‌திய க‌ம்‌யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி, கா‌வி‌ரி மேலா‌ண்மை வா‌ரிய‌ம்
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜக வேடம் கலைந்து விட்டது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
 
ஈரோட்டில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
“இலங்கை ராஜபக்சே அரசு இன ஒழிப்பு கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை நட்பு நாடு, எனவே அங்கு நடக்கும் உள்நாட்டு போரில் தலையிட முடியாது என்று கூறியது.
 
இதனையே இப்போது பதவியில் இருக்கும் பாஜக அரசும் சொல்கிறது. உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐ.நா. சபை மூலம் இலங்கையில் நடைபெற்ற இன ஒழிப்பு பற்றி விசாரணை நடத்த முயற்சி மேற்கொண்டும் இலங்கை அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
 
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்கி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் தலைவர்கள் மாநாட்டில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பங்கேற்றுள்ளார்.
 
இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த மாநாட்டில் பாஜக அரசின் பிரஜைகள் பங்கேற்றதன் மூலம் இலங்கை விவகாரத்தில் பாஜக வின் வேடம் கலைந்து விட்டது.“ இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
ஈரோடு காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி செல்கிறது. ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் கடல்போல் காட்சி அளிக்கும் காவிரி ஆற்றின் அற்புத தோற்றம்.
On Tuesday, September 09, 2014 by farook press in ,    
ஈரோடு, : ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு (கன்ட்ரோல் ரூம்) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முறையாக சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை என்றும், பல அழைப்புகளை அங்கு பணியாற்றும் மைக் ஆப்ரேட்டர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் ஈரோடு எஸ்.பி., சிபிசக்ரவர்த்திக்கு பல்வேறு புகார்கள் சென்றது. 
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் இருந்து கன்ட்ரோல் ரூமிற்கு பொது தொலைபேசி மூலம் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி தொடர்பு கொண்டுள்ளார். பொதுமக்களில் ஒருவரை போல குரலை மாற்றி பேசிய அவர், ‘‘சார்... லட்சுமி நகரில் இருந்து பேசுகிறேன். இங்கு ஒரே அடிதடி ரகளையாக இருக்கிறது. தயவு செய்து போலீஸ்காரர்கள் யாரை யாவது அனுப்பி அடிதடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுங்கள்‘‘, என்று கூறியுள்ளார். 
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறி விடுவதாக கூறி போனை வைத்து விட்டார். லட்சுமி நகரில் சுமார் 15 நிமிடங்கள் போலீசார் யாரேனும் வருகிறார்களா? என்று காத்திருந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி யாரும் வராததால், மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு, சார்... எந்த போலீசும் வரவில்லை? இங்கு அடிதடி ரகளை அதிகமாகி, ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடித்து கொண்டிருக்கிறார்கள்? போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா? போலீஸ்காரர்கள் யாரேனும் வருவார்களா? என்று எஸ்.பி., கேள்வி எழுப்பியுள்ளார். 
அதற்கு பதிலளித்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர், ‘‘யோவ்.. இருய்யா! நீ சொன்னால் உடனே ஆள் அனுப்பி விடணுமா? போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு; அவங்க வருவாங்க. சும்மா, சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதே,‘‘ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகும் எந்த போலீசும் அந்த இடத்திற்கு வரவில்லை. 
இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகம் வந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, கன்ட்ரோல் ரூமில் பணியில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தார். பல ஆண்டுகளாக கன்ட்ரோல் ரூமில் சுழற்சி முறையில் 4 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருவதை அறிந்தார். அந்த 4 போலீஸ்காரர்களையும் எச்சரித்த எஸ்.பி., அவர்கள் நால்வரில் மூவரை சூரம்பட்டி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கும், ஒருவரை ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக டிரான்ஸ்பர்  செய்து உத்தரவிட்டார். 
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட்டு எஸ்.பி.,சிபிசக்ரவர்த்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே தற்போது கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி வந்த 4 போலீஸ்காரர்களையும் பணியிட மாறுதல் செய்துள்ளார். இதேபோன்று இனி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம், என்றனர்.


Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    


கூட்டுறவு கடன்சங்க உறுப்பினர்களின் பணத்தை கையாடல் செய்த சங்க செயலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூட்டுறவு சங்க செயலாளர்

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையில், நெருஞ்சிப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு கடந்த 2005-2006-ம் ஆண்டுகளில் நெருஞ்சிப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த எஸ்.முருகேசன் (வயது 49) என்பவர் செயலாளராக இருந்தார். உதவி செயலாளராக நெருஞ்சிப்பேட்டை இந்திரா வீதியை சேர்ந்த முருகன் (51) என்பவரும், காசாளராக முத்துசாமி வீதியை சேர்ந்த கே.பழனிச்சாமி (47) என்பவரும் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் நெருஞ்சிப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினரான அர்த்தநாரீஸ்வரன் என்பவருக்கு அரசு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அதன்படி அவருக்கு ரூ.25 ஆயிரத்து 100 கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், இது அர்த்தநாரீஸ்வரன் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அவருக்கு கடன் தள்ளுபடி குறித்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அவர் கோபி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளரிடம் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணை

துணைப்பதிவாளர் விசாரணையின் போது சங்கத்தின் செயலாளர் முருகேசன், உதவி செயலாளர் முருகன், காசாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் இதுபோல் பலரிடம் முறைகேடு செய்து பணத்தை கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது. எனவே கோபி துணைப்பதிவாளர் சென்னை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா உத்தரவிட்டார்.

அதன்பேரில் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன் மேற்பார்வையில் ஈரோடு குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பி.பி.முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ரூ.2 லட்சம் கையாடல்

அப்போது சங்க செயலாளர் முருகேசன், உதவி செயலாளர் முருகன், காசாளர் பழனிச்சாமி ஆகியோர் செய்த கையாடல்கள் வெளி வந்தன. சங்க உறுப்பினர் எம்.ராமசாமி என்பவருடைய சர்க்கரை ஆலை ஒப்பந்த கடன், சின்னப்பகவுண்டர் என்பவருக்கு வரவேண்டிய தொகையை முத்துக்குமார் என்பவருடைய கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்தது, விஸ்வநாதன் என்பவருக்கு சர்க்கரை ஆலை ஒப்பந்த கடன் என்று சுமார் 10 உறுப்பினர்களுக்கான ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 820 கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி ஈரோடு வணிககுற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.முருகேசன், முருகன், பழனிச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் கோவை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 4-ல் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்ய போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.

Wednesday, August 13, 2014

On Wednesday, August 13, 2014 by TAMIL NEWS TV in ,

On Wednesday, August 13, 2014 by TAMIL NEWS TV in ,
Displaying Erode District DMK 001.jpg

Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by TAMIL NEWS TV in , , ,
   






On Saturday, August 09, 2014 by TAMIL NEWS TV in , , ,




On Saturday, August 09, 2014 by TAMIL NEWS TV in , , ,







ஈரோடு புத்தகத் திருவிழா பயன்மிகு பத்தாம் ஆண்டின் எட்டாம் நாள்(08.08.2014) மிக எழுச்சிகரமாகத் தொடங்கியது.
ஆரம்பித்த நேரம் முதலே மாணாக்கர்கள் அணி வகுத்து வரத் தொடங்கிவிட்டனர்.
மடைத்திறந்த வெள்ளமென நுழைந்த மாணாக்கர்கள்நூல்களைத்தேடித்தேடிவாங்கியவிதம்அரங்கிலிருந்தவர்களைஆச்சர்யப்படவைத்தது.
ஈரோடு புத்தகத் திருவிழாவின்  சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிமிடெட்டின் தலைவர் திரு பி.பெரியசாமி அவர்கள் தலைமை வகித்தார்.
ஈரோடு டெக்ஸ்டைல் லிமிடெட்டின் துனணத்தலைவர் திரு சி.தேவராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து அவர்கள் ‘அறிவே கடவுள்’ என்னும் தலைப்பிலும், திரு மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்கள் ‘உயிரின் சுவாசமல்லவா புத்தகம்’ என்னும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக, ஈரோடுபுத்தகத்திருவிழாவைமுன்னிட்டுகடந்தமாதம்நடத்தப்பட்டகல்லூரிமாணாக்கர்கள்பங்கேற்கும்மாநிலந்தழுவியபேச்சுப்போட்டியில்முதல்மூன்றிடம்பெற்றவர்களுக்குரொக்கப்பரிசுமற்றும்பாராட்டுச்சான்றிதழ்வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது.


On Saturday, August 09, 2014 by TAMIL NEWS TV in , , ,








On Saturday, August 09, 2014 by TAMIL NEWS TV in , , ,








ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளான (7.8.14) இன்று ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்திருந்தனர்.
நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் ரூ.250/- க்கு மேல் புத்தகங்களை வாங்கிச் சென்று பேரவையின் சார்பில் வழங்கப்படும் ‘நூல் ஆர்வலர்’ சான்றிதழைப் பெற்றுச் சென்றனர்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்டுள்ள ‘பணியும் பாதையும்’ அரங்கினை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டுகளித்தது மட்டுமின்றி  வெகுவாகப் பாராட்டினர்.


'உலகத்தமிழர்களெல்லாம் ரிடத்தில்' என்பதற்குச் சாலப்பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ள தமிழவேள்
கோ. சாரங்கபாணி நினைவு உலகத்தமிழர் படைப்பரங்கத்தை மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து  வருகைப் புரிந்திருந்த தமிழறிஞர்களும், புத்தக ஆர்வலர்களும் வியந்து வியந்து கண்டுகளித்தனர்.

ஈரோடு புத்தகத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்குஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு எஸ்.சிவானந்தன் அவர்கள் தலைமை வகித்தார்.

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் தாளாளர் திரு ஆர். மோகன்ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர்
. ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை ஆற்றினார்.

விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'கசடறக் கற்க' என்றும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுச் சிறப்புரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.


Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by TAMIL NEWS TV in , , ,




On Thursday, August 07, 2014 by TAMIL NEWS TV in , , ,





On Thursday, August 07, 2014 by TAMIL NEWS TV in , , ,


ஈரோடுபுத்தகத்திருவிழாவின்ஆறாம்நாள்சிந்தனைஅரங்கில்பேராசிரியர்சாலமன்பாப்பையாஅவர்களைநடுவராகக்கொண்டுகணினித்துறைவளர்ச்சியால்நிகழ்ந்துள்ளசமூகமாற்றம்வருந்தத்தக்கத்தே! வரவேற்கத்தக்கதே! என்னும்தலைப்பில்பட்டிமன்றம்நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குஈரோடுவேளாளர்கல்விநிறுவனங்களின்தாளாளர்திருடி.சந்திரசேகர்தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
எம்.ஆர்.கலர்லேப்&ஸ்டுடியோவின்நிர்வாகஇயக்குனர்திருஎல்.நாராயணன்வாழ்த்துரைவழங்கினார்.
மக்கள்சிந்தனைப்பேரவையின்தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன்விழாஅறிமுகவுரைஆற்றினார்.
கணினித்துறைவளர்ச்சிவருந்தத்தக்கத்தேஎன்னும்அணியில்முனைவர் தா.கு.சுப்பிரமணியன், திரு எம்.சண்முகம், திரு எஸ்.ராஜா ஆகியோர்  பங்கேற்று  “கணினி மாற்றங்கள் இன்று  கவலை தரும்  விஷயங்களாக மாறிவிட்டன”  என்று  வாதாடினர்.
வரவேற்கத்தக்கதே  என்னும் அணியில் பேராசிரியர் த.இராஜாராம் , செல்வி  தெய்வானை, திருமதி  பாரதி பாஸ்கர் ஆகியோர்  பங்கேற்று  “கணினி மாற்றங்கள்  இன்றைய காலத்திற்கு  ஏற்றங்களே ” என்று வாதாடினர்.
இறுதியில், கணினித்துறையின் வளர்ச்சி அறிவியலுடன் அறவியலும் சேர்ந்து இருந்தால் மட்டுமே வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தார்.
நிகழ்ச்சியில் கவிஞர்  கே.ஜீவபாரதியின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி பாராட்டு மடல்  வழங்கி கௌரவிக்கப்பட்டது .
நிகழ்ச்சியில் எண்ணற்ற  அறிஞர்களும்  எண்ணிலடங்கா ஆர்வலர்களும் பங்கேற்று பட்டிமன்றத்தை கேட்டு மகிழ்ந்தனர்.

Wednesday, August 06, 2014

On Wednesday, August 06, 2014 by TAMIL NEWS TV in , , ,

On Wednesday, August 06, 2014 by TAMIL NEWS TV in , , ,
  





On Wednesday, August 06, 2014 by TAMIL NEWS TV in , , ,



On Wednesday, August 06, 2014 by TAMIL NEWS TV in , , ,