Tuesday, September 09, 2014
ஈரோடு, : ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு (கன்ட்ரோல் ரூம்) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முறையாக சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை என்றும், பல அழைப்புகளை அங்கு பணியாற்றும் மைக் ஆப்ரேட்டர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் ஈரோடு எஸ்.பி., சிபிசக்ரவர்த்திக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 9 மணியளவில் பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் இருந்து கன்ட்ரோல் ரூமிற்கு பொது தொலைபேசி மூலம் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி தொடர்பு கொண்டுள்ளார். பொதுமக்களில் ஒருவரை போல குரலை மாற்றி பேசிய அவர், ‘‘சார்... லட்சுமி நகரில் இருந்து பேசுகிறேன். இங்கு ஒரே அடிதடி ரகளையாக இருக்கிறது. தயவு செய்து போலீஸ்காரர்கள் யாரை யாவது அனுப்பி அடிதடியில் ஈடுபடுபவர்களை கைது செய்யுங்கள்‘‘, என்று கூறியுள்ளார்.
அப்போது கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்த போலீஸ்காரர், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கூறி விடுவதாக கூறி போனை வைத்து விட்டார். லட்சுமி நகரில் சுமார் 15 நிமிடங்கள் போலீசார் யாரேனும் வருகிறார்களா? என்று காத்திருந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி யாரும் வராததால், மீண்டும் கன்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு, சார்... எந்த போலீசும் வரவில்லை? இங்கு அடிதடி ரகளை அதிகமாகி, ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடித்து கொண்டிருக்கிறார்கள்? போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி விட்டீர்களா? போலீஸ்காரர்கள் யாரேனும் வருவார்களா? என்று எஸ்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கன்ட்ரோல் ரூம் போலீஸ்காரர், ‘‘யோவ்.. இருய்யா! நீ சொன்னால் உடனே ஆள் அனுப்பி விடணுமா? போலீஸ் ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு; அவங்க வருவாங்க. சும்மா, சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதே,‘‘ என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன் பிறகும் எந்த போலீசும் அந்த இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை அலுவலகம் வந்த எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, கன்ட்ரோல் ரூமில் பணியில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்தார். பல ஆண்டுகளாக கன்ட்ரோல் ரூமில் சுழற்சி முறையில் 4 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருவதை அறிந்தார். அந்த 4 போலீஸ்காரர்களையும் எச்சரித்த எஸ்.பி., அவர்கள் நால்வரில் மூவரை சூரம்பட்டி, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கும், ஒருவரை ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாறுவேடத்தில் சென்று பார்வையிட்டு எஸ்.பி.,சிபிசக்ரவர்த்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே தற்போது கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி வந்த 4 போலீஸ்காரர்களையும் பணியிட மாறுதல் செய்துள்ளார். இதேபோன்று இனி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம், என்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment