Tuesday, September 09, 2014
உடுமலை, : கோவை, திருப்பூர் மாவட்ட பிஏபி 2ம் மண்டல பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது, பருவமழை பொழிந்து அணைகள் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும் முடிந்தது. இதை தொடர்ந்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 60 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் தற்போது 56 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று காலை 9 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு அணை மதகுகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், பொள்ளாச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயசீலன், செல்லமுத்து, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாபு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment