Monday, December 22, 2014

On Monday, December 22, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில் நடை பெற்றது. முகாமிற்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தங்கி பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலாமணி சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல், மங்கலம் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சிராஜ்தீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முகாமில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், முதியோர், விதவை உதவி தொகை, ரேசன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், சாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ், உள்ளிட்ட 343 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர் அதில் 293 (90 சதவீதம்) மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அவற்றை பயனாளிகளுக்கு வழங்கி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம் பேசியதாவது:-
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உலகம் போற்றும் அம்மா திட்டம் என்ற உன்னத திட்டத்தை தந்துள்ளார். இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்வது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் திட்டங்களை நீங்கள் அனைவரும் பெற்று பயன் பெறவேண்டும். இது போன்ற நல்ல திட்டங்களை மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழங்க உள்ளார்.அவருக்கு நீங்கள் என்றும் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு பரமசிவம் எம்.எல்.ஏ.பேசினார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம் தனது வாழ்த்துரையில் பேசியதாவது:-
இது போன்ற நல்ல திட்டங்களை அளித்து வரும் ஜெயலலிதா கரங்களை நீங்கள் வலுபடுத்தும் வகையில் வரும் காலங்களில் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் கோரிக்கை எதுவானாலும் உங்கள் பகுதி ஊராட்சி மன்ற தலைவரிடம் அளியுங்கள் அங்கு நிர்வர்த்தி செய்து தரப்படும் என பேசினார்.
முகாமில் ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணி, பல்லடம் மார்க்கெட்டிங் சொசைடி தலைவர் சித்துராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஸ்கர் அலி, நாசர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாளர் பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கிராம நிர்வாக அலுவலர் செல்வராணி நன்றி கூறினார்.
இதேபோல் திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டி ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் மகாலிங்கம், கூட்டுறவு சங்கத்தலைவர் மு.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த முகாமில் 210 மனுக்கள் பெறப்பட்டு அதில் 108 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது. அவற்றை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் சிவாஜி, வருவாய் ஆய்வாளர் ஜெகநாதன், கூட்டுறவு சங்கத் தலைவர் முருகானந்தம், மாவட்ட கவுன்சிலர் கவிதா தங்கராஜ் மாற்றும்போது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: