Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர், அக்.4-
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்பு கொடிக்கம்பத்தை இரவோடு இரவாக மர்ம மனிதர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
நடேசன்நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைஸ்கூல் மேடு பயணிகள் நிழற்குடை அருகில், சுமார் 15 அடி உயர இரும்பு குழாயில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கொடிக்கம்பத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் முழுமையாக அகற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக நடேசன் நகர் மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கே.வடிவேல் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 comments: