Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர், அக்.4-
திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மகளிர் சட்ட உதவி மன்றம் சார்பில் சட்டம் ஓர் அறிமுகம் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் சனியன்று இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர் வை.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்ட உதவி மன்றத் துணைத் தலைவர் பி.ஜெயலட்சுமி வரவேற்றார். சட்ட உதவி மன்றச் செயலாளர் எஸ்.விஜயா இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். "சட்டம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மத்தியக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் விளக்கிப் பேசினார். இதில், பெண்களுக்கான சட்டங்கள், அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும், நடைமுறையில் அமலாக்குவது, நீதித்துறை, காவல் துறையுடன் வைத்துக் கொள்ள வேண்டிய அணுகுமுறை தொடர்பாக விரிவாக அவர் எடுத்துக் கூறினார்.
இதில் சட்ட உதவி மன்ற துணைச் செயலாளர் ஈ.அங்குலட்சுமி, மாதர் சங்கத் துணைச் செயலாளர் என்.சசிகலா உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி நிறைவுரை ஆற்றினார். முடிவில் துணைச் செயலாளர் ஏ.ஷகிலா நன்றி கூறினார்.

0 comments: