Friday, September 09, 2016
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு இந்து கோவில்களின் வருமானத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதுவரை ஒரு புதிய கோவில்களை கூட கட்டவில்லை. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் கோவில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக மானிய கோரிக்கையின் போது சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 4 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலம் தான் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு தனது பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டது.இந்துக்களின் சொத்தை எப்படி அரசு பயன்படுத்தலாம்? இதுபோல் பிற மதத்தினரின் சொத்தை பயன்படுத்த முடியுமா? தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் இருந்து சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் வரவேண்டும். ஆனால் அரசு ரூ.60 கோடிதான் வருமானத்தை வசூல் செய்கிறது. சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு கிரவுண்ட் இடத்துக்கு ரூ.3 தான் வாடகை வசூல் செய்கிறார்கள். ஒவ்வொரு இந்துவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தங்கள் பகுதியில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை விரிவாக கேட்டு பெற வேண்டும். இந்து கோவில்களை இந்துக்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்.இந்தி மொழி
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தி மொழி கூடாது என்று கூறுகிறார். அவருடைய மகள், பேரன் போன்றவர்கள் எப்படி இந்தி பேசுகின்றனர்? தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் பேர் இந்தி மொழியை தனியாக பணம் கொடுத்து கற்று தேர்வு எழுதுகிறார்கள். இப்படி தனியாக தேர்வு எழுதாமல் பள்ளிகளிலேயே இந்தி மொழியை இலவசமாக கற்பிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கருணாநிதி குடும்பத்தில் பேரன், பேத்திகள் யாராவது தமிழ் வழியில் படிக்கிறார்களா? இல்லை. மு.க.ஸ்டாலினின் மருமகன் நடத்தும் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக கூட கிடையாது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்களின் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகள் யாராவது தமிழ் பள்ளியில் படிக்கிறார்கள் என்று நிரூபித்தால், நான் இப்போதே தி.மு.க. கட்சியில் என்ன, தி.க.வில் கூட இணைய தயார். நம் வாழ்க்கையில் ஒரு போதும் தீண்டாமையை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், மதமாற்றத்தை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு எச்.ராஜா பேசினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment