Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர்.

அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதான சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அது வரை பொறுக்குமா சாக்கடை? பொங்கி அய்யர்பங்களா மெயின் ரோட்டில் துர்நாற்றத்துடன் தேங்க ஆரம்பித்தது.புகார்கள் குவிந்ததால் சமாளிக்க முடியாமல் திணறிய மாநகராட்சி பணியாளர்கள் நாராயணபுரம் கண்மாய் கரை மணலை வெட்டி ரோட்டில் சாக்கடை நீர் வெளியேறாத வகையில் 'தடுப்பணை' கட்டினர்.வெளியேறும் சாக்கடைக்கு 'தடுப்பணை' தாங்காது என்றாலும் ஒரு நாளையாவது சமாளிக்கலாம் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். சாக்கடையை பாயாமல் தடுத்ததில் தவறில்லை, அதற்காக கரையை தோண்டினால் கண்மாய்க்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது மற்றொரு சந்தேகம்.

0 comments: