Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    

மதுரை முத்துராமலிங்கத்தேவர்
தெரு மார்க்கெட்டில்(20வது ரோடு) போலி பில் மூலம் கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தை தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் ஏலம் போகாத இனங்களின் நிலையை துாசி தட்ட
உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சைக்கிள் ஸ்டாண்ட், கழிப்பறை, மார்க்கெட், பார்க்கிங் உள்ளிட்ட வருவாய் கொழிக்கும் முக்கிய இனங்கள் டெண்டர் மூலம் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படுகிறது. செலவினங்கள் கொண்ட இனங்களை மட்டுமே மாநகராட்சி பராமரித்து வருகிறது.
டெண்டர் போகாதவை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ள இனங்களை அந்தந்த பகுதியில் பில் கலெக்டர்கள் கட்டணம் வசூலித்து மாநகராட்சியிடம் வழங்க வேண்டும். மாநகராட்சியின் சொத்து மதிப்பு என்ன என்பது புதிராக இருப்பதைப் போல் ஏலம் போகாத இனங்களின் நிலையும் புதிராக
இருந்தது.
சில நாட்களுக்கு முன் முத்துராமலிங்கத் தேவர் தெரு ரோடு ஆய்வுக்குச் சென்ற கமிஷனர் கதிரவன் அங்குள்ள மார்க்கெட் கடைகளிடம் ரூ.௩௦
கட்டணம் வசூலிப்பதை அறிந்தார். சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.௧௦ என்பது தெரியவந்தது.
பில் கலெக்டருக்கு பதிலாக மாற்றுப் பணியில் சென்ற அலுவலக காவலர் முருகன் என்பவர் போலி பில் மூலம் கூடுதல் கட்டணம் வசூலித்து
விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்திற்கு பிறகு தான் ஏலம் போகாத இனங்கள் பற்றிய சிந்தனை தோன்றியது.
அனைத்து உதவி கமிஷனர்களையும் அழைத்த கமிஷனர் மண்டல வாரியாக ஏலம் போகாத இனங்களின்
முழு விபரங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதுவரை
ஏல இனங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்த உதவி
கமிஷனர்கள் தற்போது வருவாய் பிரிவினரை அழைத்து ஆவணங்களை துாசி தட்டி வருகின்றனர்.
முழு பட்டியல் கிடைத்த பின் முத்துராமலிங்கத் தேவர் தெரு மார்க்கெட் போலி பில் விவகாரம் போல மேலும் பல 'குட்டு' வெளியாக வாய்ப்புள்ளது

0 comments: