Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
காங். கட்சியை யாராலும் அழிக்க முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ் வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரிகள் தங்கபாலு, திருநாவுக்கரசு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் செல்லக்குமார், முன்னாள் எம்.பி.க்கள் ஆரூண், மாணிக்கம் தாகூர், ராஜசேகரன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் கோவிந்தராஜன், சுந்தர் ராஜன், ரவிச்சந்திரன், தெய்வநாயகம், தேவராஜன், செல்வராஜ் பாண்டியன், எல்.முருகேசன், மதுரை பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.தங்க ராமன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:–
இந்த நாட்டுக்காக தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்கள் உயிரை தியாகம் செய்தனர். உயிர் தியாகம் செய்து அர்ப்பணிப்பு உணர்வோடு நாட்டை காக்கும் பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இன்று ஜனநாயகத்துக்கு சவால் விடும் வகையில் மோடி மஸ்தான் ஆட்சி நடக்கிறது. மோடி சர்வாதிகாரியாக வர துடிக்கிறார். காங்கிரசை ஓழித்து விட்டோம். ஆட்சியை பிடித்து விட்டோம் என்று அவர் நினைக்கிறார். மாநில கட்சிகளையும் ஒடுக்க துடிக்கிறார் மோடியின் இந்த கனவு பலிக்காது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை கொண்டு வந்து அதனை திருப்பி தருவோம் என்று ஆசை காட்டி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இப்போது ஏதாவது நடக்கிறதா? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டம் எங்கே போனது என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் திட்டத்தையே மீண்டும் கொண்டு வந்து மோடி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.
தமிழகத்தில் பன்னீர் செல்வத்தின் அரசு செயல்படாத அரசாக உள்ளது.
வாசன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னை ராகுல்காந்திக்கு நிகராக நினைத்து வருகிறார். அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தான் எடுத்த முடிவு தவறானது என அவர் விரைவிலேயே உணர்வார். வருகிற 28–ந் தேதி அவர் கூறியபடி புதிய கட்சியின் கூட்டம் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்படி நடந்தாலும் 2016 வரை அவரது புது இயக்கம் தாக்குபிடிக்குமா என்பது தெரியவில்லை. காங்கிரஸ் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. வாசன் வெளியேறியதால் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்

0 comments: