Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    










 பொள்ளாச்சி, : பொள்ளாச்சி சரகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.ஐ. க்கள் மற்றும் போலீசார் உட்பட 29ம் பேர் திடீர் என வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து எஸ்பி  உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி சரகத்தில், தாலுகா, மேற்கு, கிழக்கு, வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம், மகாலிங்கபுரம் மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 180க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், இச்சரகத்திற்குட்பட்ட ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிய போலீசாரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி உயர் அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், இடமாறுதல் தொடர்பான உத்தரவை மாவட்ட எஸ்பி.,சுதாகர் வெளியிட்டுள்ளார். அதில் பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ., எஸ்எஸ்ஐ., தலைமை காவலர் மற்றும் தனிப்பிரிவு போலீசார் என மொத்தம் 29 பேர் கோவை மாவட்டத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், பேரூர் மற்றும் கருமத்தம்பட்டி சரகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பேரூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால். பொள்ளாச்சி சரக ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
 

0 comments: