Sunday, December 07, 2014

On Sunday, December 07, 2014 by farook press in ,    
.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக்கப்பள்ளி இணைந்து நடத்திய பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் யு.எஸ்.பழனிசாமி தலைமை தங்கினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், மாவட்ட கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். தலைமை ஆசிரியர்கள் கா.முருகேசன் (உயர்நிலைப்பள்ளி) சு.மனோகரன் (துவக்கப்பள்ளி) ஆகியோர் வரவேற்றனர். பட்டதாரி ஆசிரியர் சு.மாரிசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், 10ம் வகுப்பு  பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி விகிதத்தை அளித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது.என்படஹ்ர்ககவும், கல்வி கற்கதாதவர்கள் இருக்ககூடாது என்பதற்காக மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜெயலலிதா வழிகாட்டுதலுடன் தமிழகம் வளர்ச்சி பாதையில் முன்னேறி கொண்டுள்ளது. இப்பள்ளியை மேல் நிலைப்பளியாக தரம் உயர்த்தவேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர். 2014-15ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். அதனால் அடுத்த கல்வி ஆண்டில் நிச்சயமாக இந்த பள்ளி தரம் உயர்த்தி தரப்படும். அதற்கான பூர்வாங்க பணிகளை கல்வி அமைச்சர் செய்து வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் 500 கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போதும், போகும்போதும் பள்ளி முன்பு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறினார்கள். நிச்சயமாக விரைவில் நெடுஞ்ச்சலை துறை அதிகளிடம் பேசி விரைவில் பள்ளிக்கு முன்பு வேகத்தடை அமைத்து தரப்படும். 
மேலும் பள்ளிக்கு அரசு நிலம் இருக்கும் பட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்.இப்பள்ளியின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியை வேறு பாதை வழியாக கொண்டு செல்ல மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.வரும் எனவே, மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்கும் திட்டங்களை பெற்று அவற்றை பயன்படுத்தி வீட்டிற்கும், நாட்டிற்கும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம்  கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.சிவாச்சலம் ஆகியோர் வாழ்த்தி பேசினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் எஸ்.பி.லோகநாதன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கவுன்சிலர் கண்ணப்பன்,மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் இந்திராணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியம், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, சரோஜினி, ஆசிரியர்கள் மஞ்சுளா, செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்சிகள் நடை பெற்றது.
முடிவில் பட்டதாரி ஆசிரியை ஏ.அனிதா நன்றி கூறினார். திருப்பூர் மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா பல்லடம்  புரபசனல் கல்லூரியில் நடைபெற்றது.திருப்பூர் அடுத்துள்ள பொல்லிகாளிபாளையம் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.



0 comments: