Wednesday, December 24, 2014
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது36), இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வஞ்சிப்பாளையத்தில் உள்ள தனது தங்கை கார்த்திகா வீட்டிற்கு குடிபோதையில் சென்று அவரது கணவர் சசிகுமாரிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்துள்ளார். இது குறித்து கார்த்திகா தனது மற்றொரு அண்ணன் சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்து சாலையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.காலையில் வெகுநேரமாகியும், கிருஷ்ணமூர்த்தியை காணாததால் அவரது தந்தை தோட்டத்து சாலைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மரக்கட்டையால் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினார்கள்.கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்பட்டது. மோப்ப நாய் யாரையும் பிடிக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரை தம்பி மற்றும் தங்கை கணவர் அடித்துக்கொலைசெய்தார்களா? அல்லது மர்மமனிதர்கள் யாராவது அடித்துக்கொலை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக் கியவர். கடந்த மே மாதம் இ...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
காங்கயத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயத்தில் அம்மா உணவக...
0 comments:
Post a Comment