Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது53).இதே ஊரைச்சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (42).சக்திவேல்(43).ராஜ்குமார் (22) ஓரே ஊரைச்சேர்ந்த இவர்கள் 4 பேரும் குமாரபாளையத்தில் இருந்து நேற்று காலை ஒரு காரில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே புதுப்பையில் உள்ள முத்தம்மாளின் மகள் வீட்டுக்கு புறப்பட்டு வந்தனர். இந்த காரை ராஜ்குமார் ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் முத்தூர்–ஈரோடு ரோட்டில் உள்ள செங்கோடம்பாளையம் பிரிவில் அருகே நேற்று மதியம் வந்த போது திடீரென்று எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் முத்தம்மாள், சக்திவேல் ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவும் ராஜ்குமார், ஹரிதாசுக்கு பலத்த காயம் அடைந்தது. இவர்கள் 4 பேரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: