Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
அவர்களிடம் இருந்து 613 மூடை கோழித்தீவனம் மற்றும் தேங்காய் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அலங்கியம், காங்கயம், ஊதியூர், பல்லடம் மற்றும் கோவை மாவட்டம் சூலூர் ஆகிய இடங்களில் கடந்த 3 ஆண்டுகளாக கோழிப்பண்ணைகளில் புகுந்து கோழித்தீவன மூட்டைகளை மர்ம நபர்கள் தொடர்ச்சியாக திருடிச்சென்றனர். அது மட்டுமல்ல காங்கயம், ஊதியூர் மற்றும் அவினாசிபாளையம் பகுதிகளில் தேங்காய் பருப்பு களத்தில் இருந்து தேங்காய் பருப்புகள் மற்றும் டிராக்டர்கள், ஜீப் மற்றும் இரு சக்கர வாகனங்கள் திருட்டுப்போனது.
இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி தாராபுரம் அருகே உள்ள செலாம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் (வயது 40) கறி கோழிப்பண்ணையில் இருந்து அதிகாலை மர்ம ஆசாமிகள் சிலர் வேனில் கோழித்தீவன மூடைகளை திருடிச்சென்றனர். இதை பார்த்த சுரேஷ்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த வேனை சுரேஷ்குமாரும், போலீசாரும் விரட்டி சென்றனர். அப்போது போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி திருடர்கள் தப்பி சென்றபோது அவர்களின் வேன் மாந்தியாபுரம் அருகே ஒரு வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 திருடர்கள் தப்பி விட்டனர். சிறுவன் ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தாராபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவர் மாடசாமி என்ற ஆறுமுகம் (32) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த செண்பகத்தோட்டம் தென்றல்நகரை சேர்ந்தவர் என்றும் இவர் கட்டிட வேலைசெய்து வருவதாகவும், மற்றொருவர் தாமரைச்சாமி (வயது 35), கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னசெட்டிபுதுரை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் என்றும் தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் புகுந்து கோழித்தீவன மூடைகளை திருடியதாக போலீசில் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்புள்ள 471 கோழித்தீவன மூடைகள், ரூ.3லட்சம் மதிப்புள்ள 142 மூடை தேங்காய் பருப்பு, 2 பவுன் நகை, 2மின் மோட்டார்கள், டிராக்டர்–1 மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2 பேர் மீதும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24 வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

0 comments: