Sunday, December 07, 2014

On Sunday, December 07, 2014 by farook press in ,    
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா பல்லடம் அடுத்துள்ள லட்சுமி மில் அருகில் உள்ள புரபசனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வரவேற்று பேசினார்.
விழாவில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியருக்கான விருது உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் டி.சிவக்குமார், ஆர்.பழனிசாமி, வி.மாரியப்பன், உடுமலை ஸ்ரீவிசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியைகள் ஆர்.சுகந்தி,பி.சுகந்திலதா,உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.எஸ்.வசந்தராஜ், திருப்பூர் கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.சிவகுமார்,ஆசிரியை யு.ஏ.ஆர்.வகிதா ஆகியோருக்கும், 40 பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருதையும்,10 மற்றும் 12ம் வகுப்பு பாடப்பிரிவில் 100 சதம் தேர்ச்சி விகித்தை அளித்த 1520 ஆசிரியர்களுக்கும் ஆக மொத்தம் 1569 ஆசிரியர்களுக்கு விருது மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி புரபசனல் கல்வி நிறுவனங்களின் தலைவரும்,தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சுப்பிரமணியம் வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:-
உலகில் உள்ள பணிகளில் சிறந்த பணி ஆசிரியர் பணியாகும்.இந்த பணிக்கு நிகர் வேறு ஏதும் இல்லை.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலும் நல்ல தேர்ச்சி விகித்ததை அளித்துள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர் போன்றவர்கள் அவர்கள் தான் எதிர்கால இந்தியாவிற்கு நல்ல குடிமகன்களை உருவாக்கி தருகின்ற பொறுப்பும் உடையவர்களாகவும் உள்ளனர் என்று பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கரோலின்,நேர்முக உதவியாளர் நூர்மாலிக், புரபசனல் கல்லூரி இயக்குநர் சந்திரமோகன்,முதல்வர் சந்திரசேகர்,தலைமை நிர்வாக அலுவலர் முத்துக்குமார்,வளாக பராமரிப்பு அலுவலர் யுவராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி விகிதம் பெற்ற கன்னிவாடி, மூலனூர் (மாதிரி), புதுப்பை, திருப்பூர் பாளையக்காடு எம்.என்.எம்.செட்டியார் பள்ளி, அவிநாசி புனித தாமஸ் பள்ளி , கோவிந்தாபுரம் மாணிக்கசாமி, உடுமலை எஸ்.வி.ஜி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளும்,
பஞ்சலிங்கம்பாளையம், கருகம்பாளையம், கருகன்காட்டுபாளையம், பொல்லிகாளிபாளையம், என்.சி.ஜி.வலசு, நஞ்சைதலையூர், சங்கரண்டாம்பாளையம், சின்னக்காம்பட்டி, பேரளம்,தேர்பட்டி, நல்லிமடம்,ஒலப்பாளையம்,மலையாண்டிபட்டணம்,போதம்பாளையம்,வஞ்சிபாளையம், புதுப்பை ,சர்கார்பெரியபாளையம்,கோடங்கிபாளையம்,கொங்கல்நகரம்,மூலனூர், திருமலைகவுண்டம்பாளையம், சின்னகாம்பாளையம், பொட்டிகாம்பாளையம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, காட்டூர், நடுவேலம்பாளையம், துங்ககாவி, அருகம்பாளையம், லட்சுமி நாய்க்கன்பட்டி, திருப்பூர் புதுராமகிருஷ்ணபுரம் மற்றும் நொய்யல் வீதி ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கும்,
12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதம் தேர்ச்சி விகிதம் பெற்ற வடுகபட்டி,கன்னிவாடி, படியூர், புதுப்பை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விருது மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது

0 comments: