Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by farook press in ,    
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விமலா (25). இவர்களுக்கு ஏற்கனவே 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் விமலா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் விமலாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சை டிரைவர் அய்யப்பன் ஓட்டி வர அதில் மருத்துவ தொழில்நுட்ப பாண்டிசெல்வியும் வந்தார்.
விமலாவை பரிசோதித்த பாண்டிச்செல்வி உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். பின்னர் ஆம்புலன்சு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பயங்கர வலி ஏற்பட்டு கதறினார். இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டு விமலாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து 15.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விமலாவும் குழந்தையும் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும்–சேயும் நலமாக உள்ளதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.

0 comments: