Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    

வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
 
''தி இண்டர்வியூ'' என்ற இந்தத் திரைப்படம் பல சுயாதீன திரையரங்குகளில் நள்ளிரவுக் காட்சியாக காண்பிக்கப்பட்டுள்ளது.
 
சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த நகைச்சுவைத் திரைப்படத்தை, அதற்கான தனியான சிறப்பு இணையதளத்திலும் கூகுள் மற்றும் மைக்ரொசாஃப்ட் இணையங்கள் ஊடாகவும் வெளியிட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் மட்டுமே இந்தப் படத்தை இணையத்தில் பார்க்கமுடியும்.
 
'ஹேக்கர்ஸ்' எனப்படும் இணையதளங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவோரின் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் திரைப்படத்தின் முதல் வெளியீடு ரத்து செய்யப்பட்டிருந்தது.
 
வடகொரியாவுடன் தொடர்புடையவர்களையே அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பில் குற்றம்சாட்டுகின்றனர்.
 
இதனிடையே, பேச்சு சுதந்திரத்துக்கான தங்களின் அர்ப்பணிப்பையே இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முடிவு காட்டுவதாக சோனி நிறுவனம் கூறியுள்ளது.

0 comments: