Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts

Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
கார்த்தி, கேத்ரினா தெரசா மற்றும் கலையரசன் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்துக்கு நாகி ரெட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.
 

 
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறிக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழாவில், சிறந்தப் பொழுதுப்போக்குத் திரைப்படத்துக்கான விருது மெட்ராஸ் படத்துக்கு வழங்கப்பட்டது.
 
கார்த்தி நடிப்பில் அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய இந்தப் படம், முதலாவது தலித் சினிமா என்று சிலரால் கொண்டாடப்பட்டது. தமிழின் சிறந்த அரசியல் படம் எனவும் சிலர் கொண்டாடினர்.
 
தற்போது மெட்ராஸ் சிறந்தப் பொழுதுப்போக்குத் திரைப்படத்துக்கான நாகி ரெட்டி வென்றுள்ளது. அரசியல் படம் பொழுதுப்போக்குக்கான விருதை பெற்றிருப்பது ஆச்சரியம்தான்.

Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
இந்துவும் நானே; இஸ்லாமியனும் நானே என்று பாலிவுட் நடிகரும், மான் வேட்டை வழக்கில் சிக்கியவருமான சல்மான் கான் கூறியுள்ளார்.
 
1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்த சல்மான் கான், இரவு நேரத்தில் மான்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு தொடர்ந்தது.
 

 
அதில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல் முறையீடு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
 
அந்த வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மான் வேட்டை வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜோத்பூர் நகர நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரான அவர், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என மறுத்தார்.
 
பின்னர் விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்தைவிட்டு சல்மான் கான் வெளியே வந்தார். அப்போது, பத்திரிக்கையாளர், அவரது தந்தையின் மதம் குறித்தும் அவரது தொழில் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு, ’இந்து, முஸ்லீம் இரண்டுமேதான்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், அவரது தந்தை, எழுத்தாளரான சலீம் கான் ஒரு முஸ்லீம் என்றும், அவரது தாய் சுஷீலா சாரக் ஒரு இந்து என்றும் கூறினார்.
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
நேபான பூகம்பத்துக்கு அடுத்து, ராதிகா ஆப்தேயின் நிர்வாண வீடியோவைப் பற்றிதான் அதிகம் பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அனுராக் காஷ்யபின் குறும்படத்துக்காக அவர் நடித்த நிர்வாண காட்சிதான் இப்போது இணையத்தில் உலவுகிறது. எந்தக் களவாணி அதை இணையத்தில் ஏற்றினான் என கொலவெறியுடன் தேடிக் கொண்டிருக்கிறார் அனுராக். போலீஸிலும் புகார் தந்திருக்கிறார்.
 

 
நிர்வாணச் சாமியார்களை வழிபடும் காவி கட்சி ஒன்று, துண்டு நிர்வாணப் படத்துக்காக ராதிகா ஆப்தேயை கைது செய் என்று கூக்குரலிடுகிறது. இந்த களேபரத்துக்கு நடுவில், சம்பந்தப்பட்ட ராதிகா ஆப்தே என்ன சொல்கிறார்?
 
"வேலைவெட்டி இல்லாதவனுங்கதான் இதையெல்லாம் செய்றாங்க. என்னுடைய நிர்வாணப் படத்தை ரிலீஸ் செய்ததால் எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. நான் பிஸியா நடிச்சிட்டிருக்கேன். வேலையில்லாதவனுங்க என்ன வேணா செய்யட்டும்" என்று அசட்டையாக கூறியிருக்கிறார்.
 
ஆஹா... இதே ஒரு புதுமைப் பெண்.


On Saturday, May 02, 2015 by Unknown in ,    
தெலுங்கில் இவரை ஜுனியர் அனுஷ்கா என்று அழைக்கிறார்கள். அசப்பில் பத்து வருடங்களுக்கு முந்தைய அனுஷ்காவைப் பார்ப்பது போலதான் இருக்கிறது.
 
தெலுங்கில் வெளியான மாயா படம்தான் இந்த ஜுனியர் அனுஷ்கா - சுஷ்மா ராஜை -  பிரபலப்படுத்தியது. அவரை இந்தியா பாகிஸ்தான் படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார், விஜய் ஆண்டனி.
 
எப்படி தமிழ்ப்பட வாய்ப்பு கிடைத்தது?
 
தெலுங்கில் நான் நடித்த, மாயா படத்தைப் பார்த்துதான் இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
 

 
உங்களைப் பற்றி சொல்லுங்கள்....?
 
பெங்களூருவில் பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அந்தப் படங்களை பார்த்து இந்த வாய்ப்பினை எனக்கு அளித்தார் இயக்குனர் ஆனந்த்.
 
என்ன மாதிரியான கதாபாத்திரம்?
 
படத்தில் எனக்கு தைரியமான பெண் கதாபாத்திரம். சண்டையெல்லாம் போட வேண்டும். படத்தில் நானும் விஜய் ஆண்டனியும் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். முன் அனுபவம் இருந்ததால் எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓகே செய்ய முடிந்தது.
 
தமிழில் முதல்முறை பேசி நடிப்பது எப்படி இருந்தது?
 
தமிழ் எனக்கு தெரிந்த மொழிதான். ஆனாலும், சில காட்சிகளில் தமிழ் பேசி நடிக்க கஷ்டப்பட்டேன்.
 
என்ன மாதிரியான காட்சி...?
 
உதாரணமாக ஒரு நீதிமன்ற காட்சி. அதில் சுத்த தமிழ் பேசி நடிப்பது கஷ்டமாக இருந்தது.


இந்தப் படத்தில் காஸ்ட்யூம் டிஸைனராகவும் இருந்திருக்கிறீர்களாமே?
 
ஃபேஷன் டிஸைனிங் படித்ததால் காஸ்ட்யூம் சென்ஸ் எனக்கு உண்டு. இந்தப் படத்தில், பலகோடி பெண்களில் என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். மற்றபடி காஸ்ட்யூம் டிஸைனராக எல்லாம் நான் பணியாற்றவில்லை.
 

 
படத்தில் மறக்க முடியாத சம்பவம்?
 
நாய்கள் என்றாலே எனக்கு பயம். படத்தில் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சியை படமாக்கும்போது நாய் என் மீது தாவி என்னை கடித்ததில் நான் கீழே விழுந்துவிட்டேன். இப்படத்தில் நடித்ததை மறக்க முடியாத அளவிற்கு இந்த சம்பவம் அமைந்தது. அதேபோல் இந்தப் படத்தில் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் நடித்ததையும் மறக்கவே முடியாது. அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்று கற்றுக்கொண்டேன்.
 
விஜய் ஆண்டனி குறித்து எதுவும் சொல்லவில்லையே?
 
விஜய் ஆண்டனி மிகவும் நல்ல மனிதர். யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார். நகைச்சுவை உணர்வுமிக்கவர். 
 
நீங்கள் அனுஷ்கா சாயலில் இருப்பதாக கூறும்போது என்ன தோன்றும்?
 
அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருப்பதாக சொல்வதை மிகவும் நல்ல விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.
 
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
நடிகைகளின் ஆபாச வீடியோ என்றால் ஆலாய் பறப்பவர்கள் இருக்கும்வரை இந்த ஆபாச வீடியோ கூத்து நிற்கப் போவதில்லை. கொஞ்ச நாள் முன்பு ராதிகா ஆப்தேயின் ஆபாசப் படங்கள் இணையத்தில் வெளியானது. வழக்கம் போல அவர், படத்தில் இருப்பது நான் அல்ல என்று மறுத்தார்.
ஹன்சிகாவின் குளியல் காட்சி என்ற பெயரில் வெளியான படங்கள் தத்ரூபம். அது நான் இல்லை என்று ஹன்சிகா மறுத்த பின்பும் யாரும் நம்புவதாக இல்லை. வசுந்தரா, லட்சுமி மேனன் என்று இந்தக் கூத்து தொடர்ந்தது. நித்யா மேனனின் முத்தக்காட்சி என்று ஒரு வீடியோ வேறு நடுவில் ஓடிக் கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் அனுஷ்காவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் ஒரு ஆபாச வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரிலீஸைதான் இணைய ஆர்வலர்கள் தேடிப் பார்த்து வருகின்றனர். விரைவில், படத்தில் இருப்பது நான் அல்ல என்று அனுஷ்கா அறிக்கை வெளியிடுவார். அது உண்மையாகவும் இருக்கலாம்.
 
ஆனால், யார் நம்பப் போகிறார்கள். 
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
பாலக்காட்டு மாதவன் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விவேக், அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், சினிமா நாயகிகள் குறித்த தனது கவலையை வெளியிட்டார். நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்தான் கணவனாக வேண்டும் என்று சொல்லும் நடிகைகள், காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர தயக்கம் காட்டுகிறார்கள், தட்டிக் கழிக்கிறார்கள் என்றார்.
இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முதலில் வைத்தவர் தங்கர்பச்சான். அவர் காமெடி நடிகர் இல்லை என்றாலும் அவரது சீரியஸ் பேச்சுகளில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் யாரும் முன்வரவில்லை என்று, உங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகப்போறதில்லை, ஆண் பிள்ளை பிறக்கப் போறதில்லை என்றெல்லாம் வசைபாடினார். 
 
கருணாஸ் அந்தளவுக்குப் போகவில்லை. என்றாலும் அவருக்கும் கதாநாயகிகள்தான் பிரச்சனை. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஹீரோயின் கிடைப்பதில்லை. கருப்பா இருக்கிறதால எந்த நடிகையும் நடிக்க வரமாட்டேங்குறாங்க என்று நிற அரசியலை அவர் முன்வைத்தார். இப்போது விவேக்.
 
இவர்கள் அனைவருமே நடிகைகளைத்தான் குற்றம்சாட்டுகிறார்கள். இது நியாயமா என்பதுதான் நமது கேள்வி.
 
நடிக்க வருகிற நடிகைகள், அதிலும் அழகை முதலீடாக்கி கதாநாயகிகளாக வலம்வரும் யாரும் இங்கு கலைச்சேவை புரிய வரவில்லை. அழகு இருக்கிற காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து - அப்படி நடித்தால்தான் முன்னணி நாயகி ஆக முடியும் - நாலு காசு சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் எல்லாமே. கொசுறாக புகழும் கிடைத்தால் ஓகே.
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
தொடங்கிய சில வருடங்களிலேயே மிகப்பெரிய சரிவையும், விமர்சனத்தையும் சந்தித்துள்ளது, விஜய் அவார்ட்ஸ். ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அளிக்கும் இந்த திரைப்பட விருது கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குள்ளாகி வந்தது.
 
விஜய் தொலைக்காட்சி எந்தெந்தப் படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்குகிறதோ அந்தப் படங்களுக்கு மட்டுமே பிரதான விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், எந்த முன்னணி நடிகர் விழாவுக்கு வர சம்மதிக்கிறாரோ அவருக்கு ஒரு விருது நிச்சயம் உண்டு.
திரையுலகினர், பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, சாதாரண பார்வையாளர்களே இதுவொரு சந்தர்ப்பவாத விருது என்று பேசத் தொடங்கினர். இந்த வருட விஜய் அவார்ட்ஸ் போலித்தனத்தின் உச்சத்தை தொட்டது.
 
முதலாவதாக விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் தொகுப்பாளினி என கூறப்படும் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பின்பக்கம் சூடு வைத்த குரலில் அவர் கத்தி கூச்சல் போடுகையில் ஆவியின் எழுப்புதல் கூட்டத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டதாகத் தோன்றும். அப்படியொரு குரல்வளம் அவருக்கு. தனது மைக் முழுங்கிய குரலில் அவர் கூப்பாடு போடும்போது பாதி வார்த்தைகள் புரிவதும் இல்லை. 
 
இந்தமுறையும் டிடியின் திருவாய் இதேபோல்தான் மலர்ந்தது. கடுப்பான கே.எஸ்.ரவிக்குமாரும் மைக்கில் டிடி போலவே கத்திப் பேசி, "மைக்கில் பேசினாலே நன்றாக கேட்கும். அப்படியிருந்தும் கத்தி பேசுவது டிடி ஒருத்தர்தான்" என மேடையிலேயே கடுப்படித்தார். 
 
சென்ற வருடம் சிவ கார்த்திகேயன் அழுததை திரும்பத் திரும்ப விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி நிகழ்ச்சிக்கு விளம்பரம் தேடியது. அத்தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் என்பதால் சிவ கார்த்திகேயன் மீது அளவுகடந்த உரிமை எடுத்திருப்பார்கள் போல. "இந்த விழா விடியற்காலை 2 மணிவரை நடக்கும் குடிக்க தண்ணிகூட தரமாட்டாங்க. அடுத்தமுறை புளிசாதம் கட்டிட்டு வாங்க" என்று, விஜய் தொலைக்காட்சியையும்/ விஜய் அவார்ட்ஸையும் மேடையில் விமர்சித்தார்.
 
இந்த வருட விழாவின் இன்னொரு அவலம், இளையராஜாவை விழாவுக்கு அழைத்து விருது தராமலே அனுப்பியது. செவாலியே சிவாஜி விருது இந்த வருடம் இளையராஜாவுக்கு தருவதாகக் கூறி விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். அவரும் வந்தார். ஆனால், விருது வழங்கவில்லை. சிவாஜி குடும்பத்தினர் வந்த பிறகு விருது தருகிறோம் என்று அவரை உட்கார வைத்தார்கள். அப்போதும் யாரும் வரவில்லை. அதற்கு மேலும் காத்திருந்து விருது வாங்க அவர் என்ன அறிமுக இசையமைப்பாளரா? இல்லை விஜய் தொலைக்காட்சியின் வேலைக்காரரா?. பாதியிலேயே இளையராஜா விழாவிலிருந்து வாக் அவுட் செய்தார். இதேபோல் பல பேர். 
 
சிவாஜி குடும்பத்துக்கும் முறையான அழைப்பு இல்லை போலிருக்கிறது. கடைசிவரை அவர்களில் யாரும் விழாவில் தலைகாட்டவில்லை.
 
இந்தமுறையும் அவர்கள் ஒளிபரப்பு உரிமை வாங்கிய படங்களே அதிக விருதுகளை பெற்றன. அவர்களே தந்து அவர்களே வாங்கிக் கொள்ளும் விழா என்பது உறுதியான பிறகு மற்றவர்களுக்கு அங்கு என்ன வேலை?
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
சிந்துசமவெளி நாகரிகத்தையே செக்ஸ் சிம்பலாக மாற்றிய இயக்குனர் பற்றிதான் இப்போது கோடம்பாக்கத்தில் பேச்சு. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள டாஸ்மாக்குக்கு குடிக்க சென்ற இயக்குனர், சரக்கு வாங்கியதற்கு பில் கேட்டதற்கு தர மறுத்திருக்கிறார்கள். சைடிஷ்ஷும் யானை விலை குதிரை விலை. கடுப்பான இயக்குனர் சண்டைபோட குண்டர்களால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இது குறித்து இயக்குனர் போலீஸிடம் புகார் தரப்போவதாக தகவல்.
 
சரக்குக்கு பில் தரவில்லை என்று சண்டையிட்டது நியாயம்தான். அதேமாதிரி டிக்கெட்டில் கட்டணமே போடாமல் கொள்ளை அடிக்கும் தியேட்டர் முன்னாலும் இப்படி போராட்டம் நடத்தினால் ரசிகர்கள் உங்களுக்கு சிலையே வைப்பாங்களே சாமியோவ்...
 
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
நடிகை அல்போன்சா கடந்த சில தினங்களாக செய்திகளில் அடிபடுகிறார். சுமித்ரா என்ற பெண்ணின் கணவர் ஜெய்சங்கருடன் அல்போன்சா தொடர்பு வைத்திருப்பதாக சுமித்ரா கமிஷனர் அலுவலகத்தில் தந்த புகாரையடுத்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அல்போன்சா.
இந்த விவகாரத்தில் அல்போன்சா ஏமாற்றப்பட்டிருக்கிறார், அவரிடம் தவறு இல்லை என்பது அவர் ஒருவருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் அப் தகவலிலிருந்து தெரிய வந்துள்ளது. அதில் தான் ஏமாற்றப்பட்டதை அல்போன்சா வெளிப்படையாக கூறியுள்ளார்.
 
நான் அல்போன்சா பேசுகிறேன். ஜெய்சங்கருடன் வாழும் பெண் நான்தான். தற்போது ஜெய்சங்கருடன் வாழ விருப்பம் இல்லை. நான் ஏமாந்து இருக்கிறேன். ரொம்ப நம்பி ஏமாந்திருக்கிறேன். எனது வாழ்க்கை நாஸ்தியான வாழ்க்கை. என் பாய்பிரண்ட் என்றால் எனக்கு உயிர். அவர்தான் எல்லாமே என்று இருந்தேன். அந்த காதல் செத்து விட்டது. அன்பை தேடித் தேடி அலைந்தேன். அப்போதுதான் ஜெய்சங்கரிடம் என் வாழ்க்கையை கொடுத்தேன். அவர் 8 வருடம் காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டார். அவள் ஒரிஜினல் இல்லை என்று என்னிடம் கூறினார். 
 
முதலில் என்னைத்தான் ஜெய்சங்கர் திருமணம் செய்தார். இந்த திருமணம் துபாயில் வைத்து நடந்தது. தற்போது நான் ஜெய்சங்கரை விட்டு வெளியே வந்து விட்டேன். சாரி அக்கா நான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டேன். ஜெய்சங்கரை தற்போது விட்டு விட்டேன். அவர் சுமித்ராவை அதிகமாக காதலித்து வருகிறார். சுமித்ராவுடன் அவரை வாழ வையுங்கள். 
 
- இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் சைனாவில் நல்ல வரவேற்புடன் ஓடியது.

அவர்கள் இருவரும் இணைந்து ஹிட் செய்த பிகே படமும் விரைவில் அங்கு வெளியாக உள்ளது.

pk amir khan
 

 
இந்திப் படங்களின் மார்க்கெட் சமீபமாக உலக அளவில் பரந்து விரிந்து வருகிறது. அதில் முக்கியமானது சைனா.
 
ஹாலிவுட் படங்கள் யுஎஸ்ஸுக்கு வெளியே வசூல் செய்வதில் கணிசமான பகுதி சைனாவிலிருந்துதான் வருகிறது. அவ்வளவு பெரிய சந்தை அது.
 
பிகே விரைவில் சைனாவில் வெளியாகவிருக்கும் நிலையில் ராஜ்குமார் ஹிரானியும், அமீர் கானும் மே இரண்டாவது வாரத்தில் சைனா செல்கின்றனர்.
 
இது நேரடியான பட புரமோஷனுக்காக அல்ல. சைனாவில் நடக்கும் கலாச்சார விழாவில் கலந்து கொள்ளவே இந்த பயணமாம்.
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
மே-1ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒரு விஷேச தினமாக தமிழகத்தின் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ’தல’ என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜீத் குமாரின் பிறந்தநாள் என்பது ஒரு காரணம்.
 

 
இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் நடிகர் அஜீத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தவர்களை கீழே காணலாம்.
 
நடிகை குஷ்பு: இந்தியாவின் என்னுடைய ஜார்ஜ் குளோனி அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
நேற்று உத்தம வில்லன் வெளியாகியிருக்கிறது. எல்லா கமல் படங்களையும் போல எதிர்ப்புகளைக் கடந்துதான் திரைக்கு வந்திருக்கிறது படம்.
இந்து கடவுளை விமர்சித்து பாடல் இடம் பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. படத்துக்கு தடை கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எதிர்ப்புகளை மீறி தற்போது உத்தமவில்லன் வெளியாகியிருக்கிறது.
 
தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார்

Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
2013ம் ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட தென்னிந்தியத் நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண், அஜித் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ’கூகுள்’ தந்திருக்கும் தகவலின் படி இவர்களைவிட விஜய்யை தேடியவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாம். ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளும், அதனால் ஏற்பட்ட பரபரப்பும்தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இவைதவிர, அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகைகள் பட்டியலில் கத்ரீனா கைஃப், அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் படங்கள் பட்டியலில் சென்னை எக்ஸ்பிரஸ் படம் முதல் இடத்தினை பிடித்திருக்கிறது. அதேசமயம், மக்களால் தேடப்பட்ட பிரிவில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது.
கூகுள் இணையத்தில், விஜய் முதல் இடத்தை பிடித்திருப்பதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் #VijayTheMostSearchedSouthIndianActorInGoogle என்ற டேக்கை டுவிட்டர் தளத்தில் பரப்பி வருகின்றனர்.

Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    
'ஐ' படத்தில் ஒஜாஸ் ரஜானி
'ஐ' படத்தில் ஒஜாஸ் ரஜானி
'ஐ' படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அப்படத்தில் நடித்த திருநங்கை ஒஜாஸ் ரஜானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ' படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோருடன் திருநங்கை ஒஜாஸ் ரஜானியும் நடித்துள்ளார். இவர் இந்தி திரையுலகில் பிரபலமான ஒப்பனை கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஐ' படத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரித்துள்ளார் இயக்குநர் ஷங்கர் என்று திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குநர் ஷங்கர், விக்ரம், சந்தானம் ஆகியோர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஒஜாஸ் ரஜானி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறியிருப்பது:
"'ஐ' திரைப்படத்தில் எனது கதாப்பாத்திரத்தை இயக்குநர் ஷங்கர் தாழ்த்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. சொல்லப்போனால் எனது கதாப்பாத்திரத்தை அவர் நல்ல முறையில் கதையில் வடிவமைத்துள்ளார். கதையில் நான் விக்ரம் கதாப்பாத்திரத்தை காதலிக்க வேண்டும். அந்தக் காதலை எனது இயல்பில் வெளிப்படுத்தும் விதமே படத்திலும் இடம்பெற்றுள்ளது.
அதனால், இந்தப் படத்தை எதிர்த்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை நினைத்து நாம் பெருமைகொள்ள வேண்டும். தற்போது நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆகையால், என்னால் நேரில் உங்களிடம் பேச முடியவில்லை. எனது இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு 'ஐ' படத்துக்கு எதிராக போராட்டங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்
On Thursday, January 22, 2015 by Unknown in ,    
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.
அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பால்கி.
இளையராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் தனுஷ் நடிகராகவும், அவருக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இயக்குநர் பால்கி 'ஷமிதாப்' கதையை முதலில் அமிதாப் பச்சனிடம் தெரிவித்திருக்கிறார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு "நன்றாக இருக்கிறது, அந்த நடிகர் வேடத்தில் யாரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டு இருக்கிறார் அமிதாப் பச்சன்.
"ரஜினி அல்லது தனுஷ் மாதிரியான தென்னந்திய நடிகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும்" என்று கூற, "தனுஷிடம் பேசுங்கள்" என்று தனுஷுக்கு பரிந்துரை செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.
இப்படத்தின் மூலம் தனுஷ் தனது திரையுலக வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்வார் என்கிறது படக்குழு

Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    

வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
 
''தி இண்டர்வியூ'' என்ற இந்தத் திரைப்படம் பல சுயாதீன திரையரங்குகளில் நள்ளிரவுக் காட்சியாக காண்பிக்கப்பட்டுள்ளது.
 
சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த நகைச்சுவைத் திரைப்படத்தை, அதற்கான தனியான சிறப்பு இணையதளத்திலும் கூகுள் மற்றும் மைக்ரொசாஃப்ட் இணையங்கள் ஊடாகவும் வெளியிட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் மட்டுமே இந்தப் படத்தை இணையத்தில் பார்க்கமுடியும்.
 
'ஹேக்கர்ஸ்' எனப்படும் இணையதளங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவோரின் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் திரைப்படத்தின் முதல் வெளியீடு ரத்து செய்யப்பட்டிருந்தது.
 
வடகொரியாவுடன் தொடர்புடையவர்களையே அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பில் குற்றம்சாட்டுகின்றனர்.
 
இதனிடையே, பேச்சு சுதந்திரத்துக்கான தங்களின் அர்ப்பணிப்பையே இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முடிவு காட்டுவதாக சோனி நிறுவனம் கூறியுள்ளது.

Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
வால் நடிகையின் கவர்ச்சியை பபார்த்து ஆடிபபாய் இருக்கிறது தணிக்கை குழு. கதா நாயகியாக  லட்சணமாய் வந்த இவரா அரை குறை  ஆடையில் இவ்வளவு ஆபபாசம் காட்டுகிறார் என முணுமுணுக்கிறார்கள். தமிழில் மூடி மறைத்து வந்த அவர் தெலுங்கு பட மொன்றில் தான்  இது பபால் கவர்ச்சியின் எல்லை வரை பபாய் தணிக்கை குழுவை அதிர வைத்து இருக்கிறார்.  கதாநாயகனுடன் நெருக்கத்தில் எந்த நடிகையும் செய்யாத அளவு துணிச்சல் காட்டியுள்ளார்.  சில காட்சிகளில் அரை நிர்வாணமாகவே  கூட வந்தாராம். ஆபபாச நடிகை அளவுக்கு கீழ் இறங்கி நடித்துள்ள அந்த காட்சிகளை தணிக்கையாளர்கள் வெட்டி எறிந்து விட்டார்களாம். மார்க்கெட்டை தக்க வைக்கவும் சக நடிகைகள்  பபாட்டியை சமாளிக்கவுமே இந்த அளவு கவர்ச்சிக்கு இறங்கி வந்துள்ளார் என்கின்றனர்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
‘ஐ’ படத்தை முடித்துள்ளார் விக்ரம். அடுத்து கோலி சோடா படத்தை எடுத்து பிரபலமான விஜய்மில்டன் டைரக்டு செய்யும் ‘10 எண்றதுக்குள்ளே’ என்ற படத்தில் நடிக்கிறார். தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் ஆக்க்ஷன் கதையே இப் படம். இதை முடித்து விட்டு அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க பச்சுவார்த்தை நடக்கிறது.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
கத்தி’ படத்தில் விஜய் கேரக்டர் என்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இதில் அவர் இரு தோற்றங்களில் வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்தில் வில்லனாகவும், நாயகனாகவும் இரு வேடங்களில் வந்தார். நாயகியாக நடிக்கும் சமந்தா தனது திரையுலக வாழ்க்கையில் ‘கத்தி’ முக்கிய படமாக இருக்கும் என்கிறார். இதை இந்தியில் ‘ரிமேக்’ செய்ய இப்போதே பேச்சு நடக்கிறது.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
கொம்பன்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் லட்சுமிமேனன். இதில் திமிர் பிடித்த அடாவடி பெண் கேரக்டரில் வருகிறார். கிராமத்து கதையம்சம் உள்ள படம் என்பதாலும் தன் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாலும் இதில் மகிழ்ச்சியாக நடிப்பதாக கூறினார்.
இதில் லட்சுமிமேனன் தந்தையாக ராஜ்கிரண் வருகிறார். குட்டிப்புலி படத்தை எடுத்த முத்தையா டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.